பிஜேபி ஆளும் கருநாடகத்தில் தொழிலதிபர்கள் தொடர்ந்து தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

பிஜேபி ஆளும் கருநாடகத்தில் தொழிலதிபர்கள் தொடர்ந்து தற்கொலை

- பின்னணி என்ன?

பெங்களூரு, ஜன.5- பாஜக ஆளும் கருநாடகாவில் ஊழல் முறைகேடுகள் பெருகி, ஆட்சிக்கான மாண்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆட்சி முடிவடையும் தருவாயில், பாஜக  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்-க்கள் அடிக்கும் கொள்ளைக்கு சாமா னியர் முதல் பெரு முதலாளிகள் வரை யாரும் தப்ப முடிய வில்லை என்ற அவலம் கருநாடகத்தில் ஏற்பட் டுள்ளது. 

எடியூரப்பா அரசில் பாஜகவின் கமிஷன் மயம்

கடந்த 2020-ஆம் ஆண்டு எடியூ ரப்பா முதலமைச்சராக இருந்தபோதே, ஊழல் குற்றச்சாட்டுகள் ஆரம்பித்து விட்டன. “கருநாடக பாஜக ஆட்சியில், எந்தத் திட்டத்தை எடுத்தாலும் 15 விழுக்காடு ‘கமிஷன்’ கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது; இதன் மூலம் ஒவ்வொரு நாளும் பல  கோடிரூபாய் ஊழல் நடக்கிறது” என்று  பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே 7 பேர், பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பினர். 

குறிப்பாக, ‘கமிஷன்’ தொகையை வசூலிக்க மட்டும் 31 பேர்கொண்ட குழுவை, முதலமைச்சர் எடியூரப்பா வின் மகன் விஜயேந்திரா நியமித்திருப் பதாக அவர்கள் கூறினர். 

இதுதொடர்பாக, பாஜக தலை மைக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுவரும் கூட்டாக எழுதியுள்ள 6 பக்க கடிதத்தை, “காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநிலத் தின் அனைத்து திட்டங்களி லும் சித்தராமையா அரசு 10 விழுக்காடு கமிஷன் எடுத்துக் கொண்டதாக பிரதமர் மோடி  குற்றம் சாட்டினார்; ஆனால், தற்போதைய கருநாடக பாஜக அரசாங்கம் 15 விழுக்காடு ‘விஎஸ்டி - விஜயேந்திர சேவை வரி’ வசூலிக்கிறது என்று குறிப்பிட்டனர். 

ஒருகட்டத்தில் எடியூரப்பாவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், பதவி பறிபோவதற்கு 3 நாட்கள் முன்னதாகக் கூட, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் ஊழல் செய்த குற்றச் சாட்டுக்கு எடியூரப்பா உள்ளானார். பின்னர் பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால், முன்பை விடவும் ஊழல் வேகமெடுத் ததே தவிர, குறையவில்லை.  கருநாடக அரசுக் கல்வித்துறையின் அனைத்து மட்டங்களிலும், லஞ்ச - ஊழல் முறைகே டுகள் மலிந்துவிட்டதாக 13 ஆயிரம் பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2 சங்கங்கள், கடந்த 2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பகிரங்கமாக குற்றம் சாட்டின. பிரதமர் மோடிக்கே நேரடியாக தங்களின் புகாரை அனுப்பி வைத்தன.  “லாப நோக்கில் இயங்கும் பெரிய பள்ளிகளுக்கு அனுமதி அளித்து இரண்டு வெவ்வேறு பாஜக அமைச்சர் கள் கல்வியை வணிகமயமாக்கி விட்ட னர். ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் நிலவுகிறது. பள்ளி அங்கீகாரச் சான்றி தழ் வழங்கு வதற்குக் கூட மாநில கல்வித்துறை லஞ்சம் கேட்கிறது” என்று இந்த சங்கங்கள் குற்றம் சாட்டியிருந்தன. 

பிரதமரிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை

“பிரதமர் மோடி  இதில் நேரடியாக தலையிட்டு விசாரணை  நடத்த வேண் டும்" என்று கருநாடக  மாநில தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மெண்ட் கள் (கே.ஏ.எம்.எஸ்.) மற்றும் பதிவு செய்யப்பட்ட உதவிபெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் ஆகி யவை மோடியிடம் புகார் தெரிவித்தன. ஆனால், பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2022 ஏப்ரலில், கருநாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் இந்தலகா  பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (வயது 40) தனியார் விடுதியொன்றில் விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். காரணம் பாஜக அமைச்சர் கேட்ட லஞ்சம். அமைச்சர் கேட்ட லஞ்சத்தை கொடுக்க  முடியாத தால், இவருக்குச் சேரவேண்டிய பல கோடி மதிப்பிலான பணம் கையை விட்டுப் போனது, கடன்பட்டார். வட்டி கட்ட முடியாத நிலையில், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார். 

இவ்வளவிற்கும் இவர், ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற சங்- பரிவார் அமைப் பின் தேசியச் செயலாளராக இருந்து வந்தவர். அந்த செல்வாக்கு மூலமாக, அரசுத் துறைகள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். குறிப்பாக, பெலகாவியில் ரூ. 4 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தத்தை எடுத்தார். சாலையும் அமைத்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கான பில் தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

40 விழுக்காடு கமிஷன் கறாரான அமைச்சர்

40 விழுக்காடு கமிஷன் கொடுத்தால் மட்டுமே நிதியை ஒதுக்கீடு செய்வேன் என்று கருநாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கறாராக கூறிவிட்டார். 

2022  மார்ச் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் ஒன்றிய அர சின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு சந்தோஷ் பாட்டீல் கடிதம் எழுதினார். அதற்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் சந்தோஷ் பாட்டீல் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். 

சந்தோஷ் பாட்டீலின்  சகோதரர் அளித்த புகாரின் பேரில், பல  நாள் போராட்டத்திற்குப் பின் அமைச்சர்  ஈஸ்வரப்பாவை முதல் குற்றவாளியா கவும், அவருடைய உதவியாளர்கள் இரண்டு  பேரை, 2-ஆவது மற்றும் 3-ஆவது குற்றவாளியாகவும் சேர்த்து, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் காவல்துறையினர் வழக்குப்  பதிவு செய்தனர். அதன்பிறகும் எதிர்க்கட்சி களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே ஈஸ்வரப்பா பதவியிலிருந்து விலகினார். 

தொழிலதிபர் தற்கொலைக்குக் காரணமான சட்டமன்ற 

பா.ஜ.க. உறுப்பினர்

தற்போது தனது சாவுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளியை குற்றம்சாட்டி விட்டு,  2023 ஜனவரி 1 புத்தாண்டு அன்று தொழிலதிபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அமலேபுராவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 47) என்ற இந்த தொழிலதிபர், ராமநகர் மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு புத்தா ண்டு கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். ரிசார்ட்டில் தங்கியிருந்த பிரதீப் ஜனவரி 1 அன்று காலை யில் திடீரென்று எஸ்.எச்.ஆர். லே-அவுட்டில் உள்ள தனது வீட்டுக்கு தனியாக காரில் வந்தார். பின்னர் சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் ரிசார்ட் டுக்குப் புறப்பட்ட அவர், கக்கலிபுரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நெட்டகெரே பகுதி யில் காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியால் தன் னைத்தானே சுட்டுக்கொண்டு தற் கொலை செய்து கொண்டார். 

காவல்துறையினர் நிகழ்வு இடத் திற்குச் சென்று விசாரணை  நடத்திய போது, தற்கொலை செய்து கொண்ட பிரதீப்-பின் அருகே கடிதம் ஒன்று இருந்துள்ளது. 

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணங்களை பிரதீப் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதில்தான் பாஜக சட்டமன்ற உறுப்பி னரை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் மோசடியால் தொழிலதிபர் தற்கொலை

“பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகேயே புதிதாக உணவு விடுதி (ரெஸ்டாரண்ட்) திறக்க 5 பேர், என்னைச் சந்தித்துப் பேசி  இருந்தனர். அவர்கள் புதிய உணவு விடுதியில் உங்களையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பதாகவும், இதற்காக ரூ. 1.5 கோடி கொடுக்குமாறும் கேட்டனர்.

எனது வீட்டை  விற்றும், கடன் வாங்கியும் ரூ. 1.5 கோடியை கொடுத் தேன். ஆனால் என்னை பங்குதாரராக சேர்க்கவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர். அப்போதுதான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளியின் உதவியை கேட்டேன்.

அந்த 5 பேரையும், என்னையும் அழைத்து  சமாதானமாக பேசி, உணவு விடுதி (ரெஸ்டாரண்ட்) வருமானத்தில் இருந்து மாதம் ரூ. 1 லட்சம் கொடுக்கும் படி அரவிந்த் லிம்பாவளி கூறிஇருந்தார். அதன்படி, 9 மாதங்கள் தலா ரூ. 1 லட்சம் கொடுத்தனர். அதன்பிறகு, பணம் கொடுக்கவில்லை. 

என்னை பங்குதாரராகவும் சேர்க்க வில்லை. அரவிந்த் லிம்பாவளியிடம்  இருந்தும் சரியான பதில் வரவில்லை. ஒட்டு மொத்தமாக உணவு விடுதியில் பங்குதாரர் ஆக்குவதாக கூறி பணம் வாங்கியதில் ரூ. 2.20 கோடியை இழந்திருந்தேன்.

எனது சாவுக்கு கோபி, ராகவாபட், சோமய்யா, ரமேஷ் ரெட்டி, ஜெகதீஸ் மற்றும் அரவிந்த் லிம்பாவளியே காரணம்” என்று கடிதத்தில் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு வர வேண்டிய ரூ. 2.20 கோடியை பெற்று தனது மனைவி மற்றும் மகளிடம் கொடுக்குமாறும் காவல் துறையினரை பிரதீப் அந்த கடிதத்தில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை யடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள கக்கலிபுரா காவல்துறையினர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி உட்பட 6 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல் - மோசடி களால், சமானி யர்கள் மட்டுமன்றி, தொழிலபதிகளும் கூட தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் கருநாட கத்தில் அதிகரித்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment