நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமைதியாக அனைவருக்கும் புரியும் வண்ணம், அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் ஆரம்பித்து, தந்தை பெரியாரின் கொள் கைகளை விளக்கியதோடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவருக்கும் புரியும் வண்ணம்,
1. நந்தன் ஜோதியான விவகாரம்,
2. சீதையை அக்னி குண்டத்தில் இறங்கச் சொன்ன ராமர் விவகாரம்,
3. விதவை உண்டு, விதவன் உண்டா, என்று அனைவரும் உணரும் வண்ணம் கூறினீர்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள், "தமிழ்நாடு" என்ற பெயரை வைத்த போது, சட்டமன்றத்தில் தாங்களும் இருந்ததை குறிப்பிட்டீர்கள். பெயர் சூட்டிய அந்தத் தருணத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் உடல்நிலை சரியில்லாத சூழ் நிலையை தாங்கள் சொன்ன விதத்தில், எல்லோருடைய மனங்களும் சற்று கலங்கியது.
இறுதியாக, காங்கிரஸ் தோழர்களை குறிப்பிட்டும், பனியில் அமர்ந்து உரையை கேட்ட அனைத்துப் பொது மக்களை குறிப்பிட்டும், அதே நேரத்தில் தங்களது பணியையும் குறிப்பிட்டு முடித்தீர்கள். ஒரு சரித்திரம் நடந்ததை அறிய பேராசிரியர் பாடம் எடுத்தது போல் இருந்தது என்று அனைவரும், அனைத்துக் கட்சித் தோழர்களும் பகிர்ந்து கொண்டனர்.
தாங்கள் பேசியதை, "மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். தொடர்ந்து இது போல் கூட்டங்களை வாழப்பாடியில் நடத்த வேண்டும். எங்களது ஆதரவு என்றுமே உண்டு. அரசியலில் அறியாத பல செய்திகளை தங்கள் மூலம் அறிந்தோம்'' என்று அனைத்துக் கட்சியினரும் கூறினார்கள்.
"உங்களால் எங்களுக்குப் பெருமை
உங்களோடு பணி புரிவதால், என்றுமே எங்களுக்குத் தான் பெருமை"
- த.வானவில்
மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
சேலம்- 636102
No comments:
Post a Comment