பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திட்டவட்டம்

பாட்னா,ஜன.1- பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை என நிதிஷ்குமார் கூறியுள்ளார். 

2024ஆம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட் பாளர் ராகுல் காந்திதான் என காங்கிரஸ் மூத்த தலை வர்களில் ஒருவரான கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை' என திட்டவட்டமாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், பிரதமர் வேட்பாளருக்கான போட்டி யில் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து பீகாரில் ஆட்சியமைத்த நிதிஷ் குமார், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment