"வந்தேபாரத் ரயில்" - என்ன ஹிந்தி மொழி பரப்புரை ரயிலா? மேற்குவங்கத்தில் ரயிலின் மீது தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

"வந்தேபாரத் ரயில்" - என்ன ஹிந்தி மொழி பரப்புரை ரயிலா? மேற்குவங்கத்தில் ரயிலின் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இந்த ரயில் சேவை தொடங்கி சில நாள்களே ஆகியுள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட் டுள்ளது. இதில் ரயிலின் கண் ணாடிகள் சேதம் அடைந்தன. மல்டா ரயில் நிலையத்தில் இப்படிக் கல்வீச்சு சம்பவம் நடந் துள்ளது. கல் வீசிய நபர்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். கல் வீசப்பட்டதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற் பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக "இந்த ரயில் துவக்கத்தின் போதே ரயிலின் எல்லாபகுதியிலும் ஹிந்தி மொழியிலேயே அனைத்து விபரங்களும் எழுதப்பட்டு இருந்தன, இதனை எதிர்த்து ஏற்கெனவே குரல் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கருநாடகாவில் ஓடும் வந்தே பாரத் ரயில்களில் கன்னடம் மற்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் ஹிந்தி? வங்காளத்தில் ஓடும் ரயிலில் ஹிந்தி தேவையில்லை" என்று வங்கத்தின் மொழி உரிமைகளைப் போராடும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் பிஜேபி அரசின் அராஜகம்!

4000 இஸ்லாமியர்களின் 

வீடுகளை இடிக்க உத்தரவிட்டது

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டிற்குள் வீடு கட்டித்தருவோம் 2023 ஆம் ஆண்டு பிறக்கும் போது இந்தியாவில் வீடு இல்லாதவர்கள் என்று யாருமே இருக்கமாட்டார்கள் -  இது 2017ஆம் ஆண்டு சுதந்திர நாள் உரையில் மோடி பேசியது - தற்போது உத்தராகண்டில் 4000 இஸ்லாமியர்களின் வீடுகளை ரயில்வே திட்டம் என்ற பெயரில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இடிக்க உத்தரவிட்டுள்ள உத்தராகண்ட் அரசின் அறிக்கையைப் பெற்ற இஸ்லாமியர்கள் கதறி அழுகின்றனர். 

பசுமாடு சாணி போடும் இடமா ஏடிஎம்?

உ.பி. சாமியார் அரசின் கூத்து!

பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் குளிர் காலங் களில் பசுக்களை அடைக் கலாம் என்று உத்தரப்பிர தேச சாமியார் அரசு உத் தரவிட்டது. உத்தரவிட்டது பள்ளிகளுக்கு மட்டும்தான். ஆனால், ஏடிஎம் மற்றும் அரசு அலுவலகம் என அனைத்து இடங்களும் பசு மாடுகளின் அடைக்கல இடமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் என்று கூறப்படும் வாரணாசி நகரில் உள்ள ஒரு ஏடிஎம். மய்யத்தில் குளிர்சாதன வசதிகளோடு அங்கேயே சாணி போட்டு கோமியம் கழித்து படுத்திருக்கிறது. பொதுமக்கள் பயபக்தியோடு பசு மாட்டை வணங்கி பணம் எடுத்துச் செல்கின்றனர். 


No comments:

Post a Comment