காய்கறிகளை நறுக்கும் போது சிறிய வெட்டு அல்லது சமைக்கும் போது சிறிய தீக்காயம் உங்க ளுக்கு அடிக்கடி ஏற்படலாம். உங்கள் குழந்தை வெளியில் விளையாடிவிட்டு சில காயங்களுடன் வீட்டிற்கு திரும்பிய நேரங்கள் இருந்திருக்கலாம். அப்போது, காயங்களை கண்டு நீங்கள் பாயந்திருக் கலாம். ஒவ்வொரு சிறிய காயத்திற்கும், நீங்கள் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாது மற்றும் அது அதிகமாக தேவையும் படாது. எல்லா வற்றிற்கும் மேலாக, உங்கள் சமையலறையிலையே முதலுதவி செய்யலாம். ஆம், பல பெண்கள் வீட்டில் ஒரு சிறிய பெட்டியில் பேண்ட்-எய்ட் பட்டைகள், ஒரு பாட்டில் கிருமி நாசினிகள் திரவம் மற்றும் சில காஸ் ரோல்களை வைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்கள் குழந்தையின் காயங்களை போக்க இயற்கை யான பொருட்களையும் நீங்கள் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ வீட்டில் சிறிய தீக்காயம் அல்லது வெட்டு ஏற்பட்டால், சமையல றைப் பொருட்கள் உங்களைக் காப்பாற்றும். இயற்கை முதலுதவியாக எந்தெந்த சமையலறைப் பொருட் களைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சமைக்கும் போது உங்கள் விரல்களில் தீக்காயங் கள் ஏற்பட வாய்ப்புள்ளன. உங்கள் பிள்ளை சூடாக இருக்கும் தண்ணீர், டீ அல்லது கஞ்சி போன்ற ஏதாவது ஒன்றை தெரியாமல் கைத்தவறி கை அல்லது கால்களில் கொட்டிருந்தால், அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்படலாம். நீங்கள் சமைக்கும்போது, உங்களுக்கோ உங்கள் பிள்ளைக்கோ இதுபோல தீக்காயங்கள் ஏற்பட்டால், வீட்டிலையே முதலில் முதலுதவி செய்ய வேண்டும். சிறிய தீக்காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது, தீக்காயம் அல்லது கொதிக்கும் எண்ணெய் கைகளில் பட்டு விட்டால் இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு குளிர்ச்சியான நீரை காயம்பட்ட இடத்தில் ஊற்ற வேண்டும்.
எரிந்த பகுதியின் மீது குளிர்ந்த பனிகட்டி அல்லது சுத்தமான ஈரமான துணியை வைப்பது வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவும் சிறந்த முதலுதவி தீர்வுகளில் ஒன்றாகும். இவற்றை கவனமாக செய்ய வேண்டும், அதிகப்படியான பனிகட்டிகளை பயன் படுத்த வேண்டாம். ஏனெனில், இது எரிச்சலையும் அதிக எரிப்பையும் ஏற்படுத்தும்.
மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த சமையலறை மூலப் பொருள். மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு, அதை உங்கள் சமையலறையில் வைத்திருப்பது சிறந்தது. இந்த பொதுவான பயனுள்ள சமையலறை மூலப்பொருள் சிறந்த, அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சளில் உள்ள குணப்படுத்தும் முகவர்கள் வேகமாக குணமடைய உதவுகிறது. சிறிய காயங்கள் மற்றும் வெட்டுக்களில் இதை முதலுதவியாகப் பயன்படுத்தலாம். மஞ்சளை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் ஏதேனும் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
தேனின் சுவையைத் தவிர, சிறிய தீக்காயத்தை குணப்படுத்தவும் இது உதவும். அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மூலப் பொருளைத் தேடுகிறீர்களா? பின்னர் தேனைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இது உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சமையலறை பொருட்களை சிறிய வெட்டுக்கள் மற்றும் சிறிய தீக்காயங்கள் உள்ள எவரும் பயன் படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார். ஆனால் உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், பெரிய காயமாக இருந்தால், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவரை அணுக வேண்டும்.
No comments:
Post a Comment