எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை

லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து 7.3.2018இல் போடியில் தேவர் சிலை முன்பு தேனி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் ரகுநாக நாதன் தலைமையில் சர்வ கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்  எச்.ராஜா கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வழக்குப் பதிவு செய்து (வழக்கு எண்143 188 285)  24/08/2021 தேதியிலிருந்து போடிநாயக்கனூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து சென்று வந்த நிலையில் 27/01/2023 அன்று விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலையான தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ரகுநாகநாதன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் சரவணன், திமுக இளைஞரணி நகர் செயலாளர் அஜப்கான், நடராஜன், நிஜாம், ராஜேஷ்குமார்  ஆகியோருக்கு மாவட்ட திமுக வடக்கு செயலர் தங்க தமிழ்செல்வன், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment