இதுதான் உ.பி. பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

இதுதான் உ.பி. பிஜேபி அரசு

லக்னோ, ஜன. 17- 15 வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

 உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சிறுமியையும், சிறுவனையும் தேடி வந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன், சிறுமியை குஜராத்திற்கு அழைத்துச் சென்று தனது கட்டுப் பாட்டில் வைத்து ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுவன், குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, நாக்ரா நகரில் உள்ள கட்வார் மோர் அருகே காவல்துறையினர் கைதுசெய்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்ற வாளிமீது வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றவாளியின் வயது குறித்த சர்ச்சை காரணமாக அவனை சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாமியார் ஆளும் மாநிலத்தில் பெண் களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

இருப்பினும் அந்த அரசு இந்த குற்றங்களைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

No comments:

Post a Comment