ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு சிலம்பப் பள்ளி மாணவர்கள் 130 பேர் உலக சாதனைக்காக தொடர்ந்து இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை ஒசூர் மாநகராட்சி மேயர்எஸ்.ஏ.சத்யா சிலம்பம் சுழற்றி தொடங்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன்,தேவிமாதேஷ், இந்திராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சாதனை படைத்த அகத்தியர் சிலம்பம் பள்ளி ஆசான் லோகநாதனிடம் பொதுமக்கள் கையொலிக் கிடையே சாதனைக்கான விருதை வழங்கினர். பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் இரா.பிரேம் குமார், கராத்தே மாஸ்டர் க.கனராஜ், திராவிடர் கழக தொழிலாளரணி மாவட்ட தலைவர் தி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கம்,சான்றிதழ், நினைவுபரிசினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment