சென்னை, ஜன. 11- சென்னை சைதாப்பேட்டை பகுதி கழகக் குடும்பத்தைச் சேர்ந்த கழகத் தோழர் இரா.எத்திராஜன். இவர் பன்னாட்டு டேபிள் டென்னிஸ் கூட்டமைப் பில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் ஆவார்.
2023 சனவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, ஓமன் நாட்டில், மஸ்கட் நகரில், 50ஆம் மேற்பட்ட நாடுகளில் உள்ள, 1000க்கும் அதிக மான வீரர்கள் கலந்து கொள்ளும், உலக மாஸ் டர் டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை வீரர் இரா.எத்திராஜன் பங்கேற்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான (STATE LEVEL) மாஸ்டர் போட் டியில், இரா.எத்திராஜன் ஒற்றையர் வாகையர் பட்டத்தை பெற்றார்.
சமீபத்தில் ஓய்எம்சிஎ(YMCA) சார்பில் நடை பெற்ற மாநில அளவு (State Level) போட்டியில் இரா.எத்திராஜன், ஒற் றையர் மற்றும் இரட்டை யர் போட்டியில் வாகை யர் பட்டத்தை வென்றார்.
புதுச்சேரியில், இந்தி யாவின் பல மாநிலங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் ஒற்றையர் வாகையர் பட்டத்தை எத்திராஜன் வென்றார்
தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்ற இரா.எத்திராஜன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000- வழங்கினார்.
No comments:
Post a Comment