துபாயில் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 23, 2023

துபாயில் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு

சென்னை, ஜன. 23- துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உல களாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுரு கன், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், தா.மோ. அன்பரசன், விஅய்டி  பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் விஜி.விஸ்வ நாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பெருமக்கள் கலந்துக் கொள்கின்றனர்.

உலகத் தமிழர் பொரு ளாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். 

No comments:

Post a Comment