கடத்தூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பொதுக்கூட்டம்,! பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம்! பகுத்தறிவாளர் நாட்குறிப்பு வெளியீடு!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

கடத்தூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பொதுக்கூட்டம்,! பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம்! பகுத்தறிவாளர் நாட்குறிப்பு வெளியீடு!!

தருமபுரி, ஜன. 1- தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு (மாவட்ட திராவிடர் கழக தீர்மானத்தின்படி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் ஆண்டினை அடையாளமாக கொண்டு 90 பொதுக்கூட்டங்கள்  நடத்துவது என தீர்மானத்தின் படி முதல் கூட்டமாக (24-.12.-2022) சனிக்கிழமை மாலை 5 மணி அள வில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தெருமுனை பொதுக் கூட்ட நிகழ்ச்சி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சிந்தை கோ. குபேந்திரன் தலைமையில் நடை பெற்றது.

ஒன்றிய பகுத்தறிவாளர்கள் கழக செயலாளர் தாழை சோ. பாண் டியன் வரவேற்புரை ஆற்றினார். 

கடத்தூர் ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கதிர்செந்தில், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர்  தீ.சிவாஜி, செயலாளர் மு. பிரபாகரன், ஒன் றிய செயலாளர் வெ.தனசேகரன், ஒன்றிய அமைப்பாளர் ஆ. இளங்கோ, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.அன்பழகன், விடு தலை வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ. தனசேகரன், பெரியார் பெருந்தொண்டர் இரா.நெடுமிடல், ஆகியோர் முன்னிலை யேற்றனர். 

மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, மாநில கலைத் துறை செயலாளர்கள் மாரி. கருணா நிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒன்றிய செயலாளர் ச.பாலையா ஆகியோர் கருத்துரையாற்றினர்.                                                         

பேரூராட்சி மன்ற தலைவர் கு.மணி தந்தை பெரியார் படத் திற்கு மாலை அணிவித்து நிகழ்ச் சியை வைத்தார். 

கடத்தூர் தினேஷ் கிராமிய வீர விளையாட்டு குழுவினரின் சிலம் பாட்ட கலை நிகழ்ச்சியில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பாட்ட நிகழ்ச்சியை செய்து காட்டினர். 

அவர்களுக்கு மாநில கலைத் துறை செயலாளர் மாரி.கருணா நிதி பயனடை அணிவித்து சிறப்பு செய்தார்.  மாநில பகுத்தறி வாளர்கள் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் தந்தை பெரியார் பிறந்தது முதல் மறைவு வரை அவர் வாழ்க்கையில் நடை பெற்ற நிகழ்வுகளையும், போராட் டங்களையும், அவரால் பெற்ற சாதனைகளையும் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்  ஊமை. ஜெயராமன் அவர்கள் தந்தை பெரியார் பகுத்தறிவாளர் நாட் குறிப்பை வெளியிட கழகத் தோழர்கள் பெற்றுக் கொண்ட னர். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பெற்று தந்த உரிமையால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 80 ஆண்டு கால உழைப்பால் தமிழ்நாடு அடைந்த பயன்களையும், இன்று தமிழ் நாட்டை மதவாத பிஜேபி அரசு கபாலிகரம் கொள்ள துடிப்பதை யும், அதைத் தடுக்க தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட் டப்பட்ட  ஆசிரியர் வீரமணி அவர்களால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலையில் அனைத்து கட்சியினர்  ஓரணியில்  திரண்டு எதிர்கொண்டு வருகின் றனர். 

தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டில் கருப்பு மண்ணில் ஒரு நாளும் காவி மண்ணாகாது.என்று ஊமை.ஜெயராமன் சிறப்புரை யாற்றினர்.

இந்நிகழ்ச்சியில். கடத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலை வர் வினோத், ஆசிரியர் செந்தில் குமார், ஆதிமூலம், செந்தில்குமார்,  ஸ்டாலின்,  தாழை பெ.மாயவன், கோ.முருகன்,  பொ.தங்கராஜ் வேப்பிலைப்பட்டி மாணவர் கழக ஹரிகரன், வாசகர் வட்ட தோழர் கள் சுந்தர்ராஜன், மாதவன், வேப்பிலைப்பட்டி ஊர் தலைவர்  அ.திருப்பதி, மேனாள் ஊர் தலைவர் வி.டி. தனபால், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் அ. தமி ழரசன்,திமுக கிளை செயலாளர்  அமுல் செல்வம், மு.பரமசிவம், திமுக தொழில்நுட்ப அணி கண் ணப்பன்,வி.சி.க. குமரன் மற்றும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment