தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சரும், சீரிய பகுத்தறிவாளருமான முனைவர் க. பொன்முடி அவர்களின் தம்பி டாக்டர் திரு. க.தியாகராசன் (வயது 65) அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை நாம் நன்கு அறிவோம்.
அவரது இழப்பு மருத்துவ உலகிற்கும், திராவிடர் இயக்கத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் பொன்முடி அவர்களிடம் தொலைப்பேசியில் பேசி ஆறுதல் கூறினோம்.
கி.விரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.1.2023
No comments:
Post a Comment