தேசிய அரசுப் பணியாளர் தேர்வுமுகமை - தெரிந்துகொள்ள வேண்டியவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

தேசிய அரசுப் பணியாளர் தேர்வுமுகமை - தெரிந்துகொள்ள வேண்டியவை

அரசுப் பணி நாடும் தமிழ்நாடு இளைஞர்களில் அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலானோர் பொதுவாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும்  போட்டித் தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை.இதனால் ஒன்றிய அரசு பணியிடங்களில் நம் இளைஞர்களின் பங்கு சரியான அளவில் இருப்பதில்லை. ஆனால் பிற மாநில இளைஞர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்தியா முழுக்க பணியில் உள்ளனர் அது கடை கோடி கன்னியாகுமரியில்  தபால் நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள அரசு வங்கி ஆகட்டும்.

அங்கு பிற மாநில இளைஞர்கள் பணியில் இருப்பார்கள். தமிழ்நாடு இளைஞர்கள் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு தேர்வுகளில் அதிகமாக ஆர்வம் காட்டாததற்கான காரணங்கள் மூன்று. 

ஒன்றிய அரசுத் தேர்வுகள் குறித்த அச்சம்

ஒன்றிய அரசுத் தேர்வுகள் நமக்கு எதுக்கு என்ற மன நிலையில் இருப்பது 

ஒன்றிய அரசுப் பணிகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாதது

இதனால் ஆண்டு தோறும் நடைபெறும் ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் தேர்வு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

முக்கியமான காரணம்

ஒன்று தேர்வு எழுதி இருக்க மாட்டார்கள் அல்லது போதுமான தயாரிப்பு இருந்திருக்காது.! ஒன்றிய அரசின் பல தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் கால விரயம் ஏற்படுவதால் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்தும் சுமை இருப்பதால் அதை ஒன்றாக்கி தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (ழிஸிகி) ஒன்று ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டதுபோல,  தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (ழிஸிகி) ஏற்படுத்த  தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..இதில் உள்ள முக்கிய விஷயங்கள்:

 பட்டதாரிகளுக்கான ஒன்றிய அரசுப் பணிவிவரங்கள்- ரயில்வே பணிகள், வருமானவரித்துறை, சுங்க அதிகாரி , ஒன்றிய புலனாய்வுப் பணிகள், தேசிய பாதுகாப்புத்துறை, அஞ்சல் துறை ,அமலாக்கத் துறை, வங்கி அதிகாரி  போன்ற பல அதி முக்கிய பணிகள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும்.

ஒன்றிய அரசின் +2 தர பணிகளான அலுவல் பணியாளர், 

அஞ்சல் துறை ஊழியர்கள்,உதவியாளர்கள் போன்ற பணிகளும் 10ஆம் வகுப்பு  தர பணிகளான கடைநிலை ஊழியர்கள், பாதுகாப்பாளர்கள் போன்ற பணிகள் இந்த தேர்வின் நிரப்பப்படும். இந்த தேர்வு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இணையவழித் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறும்.

இந்த தேர்வு எழுத காலவரையறை எல்லை கிடையாது.. ஆண்டுக்கு இரு முறை இந்த தேர்வு நடக்கும். ஆனால் வயது வரம்பு உண்டு.

முக்கியமாக இந்த தேர்வு தமிழிலும் நடைபெறும். அது போக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்த தேர்வு நடைபெறும். இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் உரிமையும் கூட

ஒரே பாடத்திட்டம் என்பதால் கண்டிப்பாக திறனறிவுத்தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும். எனவே ஆங்கிலம் மிக முக்கியமான ஒன்று.

ஆங்கிலம் தவிர்த்து மற்ற பிரிவுகளின் கேள்விகள் தமிழில் இருக்கும்.

இந்த தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் பொறுத்து ஒன்றிய அரசு நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தி கொள்ளும். கிட்டத்தட்ட காட் தேர்வுகள் போன்று. அதில் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டு எப்படி அய் அய் எம் மற்றும் தனியார் கல்லூரிகள் சேர்க்கை நடத்துகிறதோ அதே போன்றுதான் ஒன்றிய அரசுப்பணிகளில் பணியில் அமர்தப்படுவீர்கள்.

வங்கிப் பணியாளருக்கான தேர்வு முகமை அய்.பி.பி.எஸ். இந்த முறையை தான் தற்போது பின்பற்றுகிறது. அகில இந்திய அளவில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டே எல்லா மாநிலத்தில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளுக்கு நீங்கள் போட்டி போட முடியும். இது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும். எனவே தனியார் நிறுவனங்கள் கூட இந்த மதிப்பெண்களை கொண்டு எதிர்காலத்தில் பணி அமர்த்தலாம்.

 ஒன்றிய அரசு மாநில தேர்வாணைய உரிமையில் கை வைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்வு என்பது ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தான். மாநில அரசுப் பணிகளுக்கு இல்லை.  அதற்க்கான தேர்வுகள் வழக்கம் போல் மாநில அரசுகளால் நடத்தப்படும்..!

இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று நம்  இளைஞர்களும் ஒன்றிய அரசு பணியில் சேரவேண்டும் என்பதே தமிழர்களின் பல ஆண்டு கனவு!

அதற்கான சரியான களமும் சரியான தருணமும் அமைந்து இருக்கிறது..அது தான்தேசிய அரசுப்பணியாளர் தேர்வுமுகமை  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.!


No comments:

Post a Comment