கொல்கத்தா, ஜன.21 ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார்.
மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மை யின மாணவ, மாணவி யருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாசிறீ திட்டம் அலி பூர்தரில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மம்தா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்லும். ஓபிசி, சிறுபான்மையினருக்கு மாநில அரசு கல்வி உதவித் தொகையை வழங்கும். நாங்கள் சமுதாயத்தை ஒன்றிணைக்க விரும்புகிறோம். பாஜக பிரிவினையை ஏற்படுத்த விரும்புகிறது” என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment