இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள் பூமியின் சிறு அசைவையும் கண்டுபிடிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள் பூமியின் சிறு அசைவையும் கண்டுபிடிக்கிறது

இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் தகவல்

சென்னை, ஜன. 5- சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சிறீ சாய் ராம் பொறியியல் கல்லூரியின் 23ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள சிறீலியோ முத்து உள்விளை யாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் (3.1.2023) நடை பெற்றது.

சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி  சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமை வகித்தார். சாய்ராம் குழும நிறு வனங்களின் தலைவி கலைச் செல்வி லியோமுத்து விழாவை துவக்கி வைத்தார். 

இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மேனாள் தலைவரும், இந்திய விண்வெளி துறையின் மேனாள் செயலா ளருமான கே.சிவன் கலந்து கொண்டு, முதலிடம் மற்றும் பல் வேறு திறமைகளில் சிறந்த பரிசு களை வென்ற 125 மாணவர்க ளுக்கு தங்கப் பதக்கங்கள் மற் றும் பரிசு வழங்கினார். விழாவில், இளநிலையில் 989 மாணவர்கள், முதுநிலையில் 132 மாணவர்கள் என மொத்தம் 1,121 பேருக்கு பட்டங்களை பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவ னத்தின் மேனாள் தலைவரும், இந்திய விண்வெளி துறையின் மேனாள் செயலாளருமான கே. சிவன் கூறியதாவது: 

இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோளின் உபயோகம் என்னவென்றால் அது 700 கிலோமீட்டர் உயரத் தில் இருந்து பூமியில் நடக்கின்ற ஒரு சென்டிமீட்டர் அசைவு களையும் அது கண்டுபிடித்து விடும். வானிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே தகவல் கிடைக்கும், உறைந்து கிடக்கும் பனி, உருகும் பனி என அனைத்தையும் முன் கூட்டியே துல்லியமாக கண்டு பிடித்து தெரிவிப்பதால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2030ஆம் ஆண்டு இந்தியா வில் ஸ்பேஸ் எக்கோ சிஸ்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நம் முடைய தேவைகள் மட்டுமல்லா மல் பன்னாட்டு சந்தையில் நாம் அதிக இடங்களை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் பொற்குமரன், அறங்காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய்பிரகாஷ், சதீஷ்  குமார், பாலசுப்பிரமணியம், சப் தகிரி கல்வி அறக்கட்டளையின் முதன்மை தகவல் அதிகாரி நரேஷ் ராஜ், கல்வியாளர்கள் ராஜா, ராஜேந்திர பிரசாத், அரு ணாசலம், மாறன், ஆசிரி யர்கள், பட்டம் பெற வந்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment