ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)


10.01.1948 - குடிஅரசிலிருந்து.... 

குடியானவர்கள் என்பவர்கள் யார்?

பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான, (பூமியை  உடைய)வர்கள். 

       உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்-   தந்தை பெரியார்


No comments:

Post a Comment