பெண்கள் அதிகாரம் பெற்ற சமூகம் என்று நாம் கூறும்போது நாம் வர்ணிக்கும் போது, பெண்களுக்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? இது உண்மையாக செயல்படுத் தப்பட்டு உள்ளதா? கன்னட திரைப் படமான ‘நானு குசுமா’ (நான் குசுமா) முன் வைத்த சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகள் இவை.
கோவாவில் நடைபெற்ற 53ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ எனும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கிருஷ்ண கவுடா, கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் நமது ஆணாதிக்க சமூகத்தின் யதார்த்தத்தை ‘நானு குசுமா’ பிரதிபலிக்கிறது, என்று கூறினார்.
இந்தப் படம் கன்னட எழுத்தாளர் டாக்டர் பெசகரஹள்ளி ராமண்ணா எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது, அவர் ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்விலிருந்து குறிப்புகளை எடுத்து புத்தகத்தை எழுதி யுள்ளார். “பெண்களுக்கு அதிகாரம் அளித் தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகி யவை இந்த படத்தின் மய்யமாக உள்ளது. சமூகத் திற்கு ஒரு நல்ல கருத்தை எடுத்து சொல்லும் திரைப்படங்களை உருவாக்கு வதே எனது விருப்பம்”, என்று இயக்குநர் கூறினார்.
குசுமா பாத்திரத்தை சித்தரிப்பது எவ் வளவு கடினமானது என்பதை பகிர்ந்து கொண்ட நடிகை கிரீஷ்மா சிறீதர், அந்த மனநிலையில் தொடர்ந்து இருந்தது பெரும் சவாலாக இருந்ததோடு சோர்வை ஏற்படுத் தியதாகவும் கூறினார். “இந்த குறிப்பிட்ட கருப் பொருளை திரைப்படமாக்க தேவை யான எடுத்துக்காட்டுகளுக்கு நம்மை சுற்றி பற்றாக் குறை இல்லை என்று சொல்வது இதயத்தை உடைக்கிறது”, என்று அவர் கூறினார்.
இந்தியன் பனோரமா ஃபீச்சர் பிலிம்ஸ் பிரிவின் கீழ் இப்படம் திரையிடப்பட்டது. இது மற்ற 8 படங்களுடன் பன்னாட்டு திரைப் படம், தொலைக்காட்சி மற்றும் ஒலி-ஒளி தொடர்பு மன்றம் (ICFT) - யுனெஸ்கோ காந்தி பதக்கப் பிரிவில் பங்கேற்றது. இது யுனெஸ்கோவின் கொள்கைகளை பிரதிபலிக் கும் பன்னாட்டு மற்றும் இந்திய புனைகதை திரைப்படங்களுக்காக அளிக்கப்படும் விருது.
No comments:
Post a Comment