திண்டிவனம் மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

திண்டிவனம் மாவட்ட கலந்துரையாடல்

திண்டிவனம், ஜன. 1- திண்டிவனம் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நேற்று (30.12.2022) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திண்டி வனம் மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செ.பரந் தாமன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். 

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் நவா.ஏழுமலை, மண்டல செயலாளர் தா.இளம்பரிதி,மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன்கோதை, நகர தலைவர் உ.பச்சையப்பன், நகர செயலாளர் சு.பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன்,மயிலம் ஒன் றிய செயலாளர் ச.அன்புக்கரசன், மகளிரணிதோழியர் கஸ்தூரி அன்புக்கரசன், இளைஞரணி தோழர் கே.பாபு ஆகியோர் பங் கேற்றனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஓவியர் ச.செந்தில் நன்றியுரை நிகழ்த்தினர்.

தீர்மானங்கள்:

1. தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை  சிறப்பாக கொண்டாடுதல்

2. மாதம் ஒரு முறை கலந்துரையாடல் மற்றும் பெரியார் பேசுகிறார் என்ற தெருமுனைக் கூட்டம் அல்லது கருத்தரங்கம் அரங்க கூட்டம் என்று நடத்துதல்

3. விடுதலை,  உண்மை சந்தா சேர்த்தல்  போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

No comments:

Post a Comment