நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுப்பதா? மகள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுப்பதா? மகள் எதிர்ப்பு

பிராங்க்பர்ட், ஜன.22 நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸின் இந்த முயற்சி நேதாஜியின் பாரம்பரியத்தை சுரண்டும் செயல் என்று அவரது மகள் அனிதா போஸ் பாஃப் விமர்சித்துள்ளார்.

23.1.2023 - _ நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள். இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஜெர்மனியில் வசித்துவரும் அனிதா போஸ் பாஃப் இடம் செய்தி நிறுவனம் ஒன்று தொலைப்பேசி வாயிலாக பேட்டி எடுத்துள்ளது. அந்த நேர்காணலில், "நேதாஜி போதித்த அனைத்து மதங்களையும் மதிக்கும் கொள்கையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவற்றால் பிரதிபலிக்க முடியாது. நேதாஜி ஒரு இந்துவாக இருந்த போதிலும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். 

பல்வேறு மத பற்றாளர்களிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை உரு வாக்குவதற்கு அவர் ஆதரவாக இருந் தார்  ஆர்எஸ்எஸ்- மற்றும் பாஜகவும் இந்த நடைமுறையை பிரதிபலிப்ப தில்லை. எளிமையாக சொல்ல வேண் டுமென்றால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி இடதுசாரி. ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் கொள்கையும் நேதாஜியின் கொள்கையும் எதிரெதிர் துருவங்கள். அவை ஒத்துப்போக முடியாதவை. நேதாஜியின் கொள்கைகளை ஆர் எஸ்எஸ் பின்பற்ற விரும்பும் என்றால் அது மிகவும் நல்ல விஷயம். பல்வேறு பிரிவினர் பல்வேறு வகையில் நேதா ஜியின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகின்றனர். அவர்கள் நேதாஜி யின் கொள்கைகளுடன் உடன்படுவது மிகவும் அவசியம். ஆர்எஸ்எஸ்-_அய் நேதாஜி விமர்சித்தாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இது தொடர்பாக நேதாஜியின் எந்த மேற்கோள்களையும் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இருந்திருக் கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்த அவரின் (நேதாஜி) பார்வை என்ன என்பது எனக்குத்தெரியும். மதச்சார்பின்மை குறித்த நேதாஜியின் கருத்தும், ஆர் எஸ்எஸ்-_இன் கருத்தும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment