குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி கடந்த ஆண்டு மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி கடந்த ஆண்டு மறுப்பு

புதுடில்லி, ஜன 5- குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசு அலங் கார ஊர்தி தேர்வு செய் யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக நடை பெற உள்ளது. இதை யொட்டி டில்லி ராஜ பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறு வது வழக்கம். தமிழ்நாடு அலங்கார ஊர்தி, இந்திய ராணுவத்தின் வலி மையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர் களின் கண்கவர் அணி வகுப்பு, ராணுவ தளவா டங்களின் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணி வகுப்பும் நடைபெறும்.

அந்த வகையில், இந் தாண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒன் றிய அரசால் தேர்வு செய் யப்பட்டுள்ளது. 

குறிப்பாக, ஏழு கட்ட மாக நடைப்பெற்ற தேர் வுகளில் இறுதியாக ஆந் திரப் பிரதேசம், அரு ணாச்சலப் பிரதேசம், அசாம், குஜராத், அரி யானா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள் ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு குடி யரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அர சின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை. தமிழ்நாட்டிலி ருந்து நாட்டின் விடு தலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதி யார், இராணி வேலுநாச் சியார், மருது சகோதரர் கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

தமிழ்நாடு அரசின் ஊர்தி இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டா லின் கடிதமும் எழுதியி ருந்தார். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் ஊர் திக்கு இடம் கொடுக்கப் படவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஒன்றிய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை நாங் கள் முடிவு செய்யவில்லை எனவும் அதற்காக அமைக் கப்பட்டு இருக்கும் நிபுணர் குழுதான் முடிவு செய்வதாக கூறியிருந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் கூட எழுப்பப்பட்டு இருந்தது. டில்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழ் நாடு அரசின் அலங்கார ஊர்தி தமிழ்நாடு முழு வதும் மக்கள் பார்வைக் காக பல்வேறு மாவட் டங்களிலும்  காட்சிப் படுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு கடந்த ஆண்டு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு உடனடியாக அனுமதி கொடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment