காற்றழுத்தத்தில் செயல்படும் மின்தூக்கி தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

காற்றழுத்தத்தில் செயல்படும் மின்தூக்கி தயாரிப்பு

சென்னை, ஜன. 22- உலகிலேயே முதலாவது இரும்புக் கம்பி இணைப்பு தேவைப்படாத, காற்றழுத்தத்தில் செங் குத்தாக மேலும், கீழும் செயல்படும் நிபவ் லிஃப்ட்ஸ் அறிமுகம்.

இதற்கு கயிறு, பெல்ட், வயர் இணைப்பு அல்லது கடினமான இணைப்பு கட்டமைப்பு எதுவும் தேவையில்லை. இந்த லிஃப்ட் இயக்கமானது முழுவதும் காற்றில் செயல்படுவதால், இதற்கு மசகு எண்ணெய் போட வேண்டிய அவசியமும் கிடையாது.

இந்தியாவில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு அவர்கள் வீடுகளில் சுதந்திரமாக இயங்க உரிய சூழலை உருவாக்கித் தர வேண்டி யுள்ளது. இந்தக் கம்பி இல்லாத மின் தூக்கிகள் அவர்களுக்கு ஒரு வாய்ப் பாகும். இதை இயக்கு வதும் மிகவும் எளிதா னது. இதில் நான்கு அடுக்கு பாதுகாப்பு அம் சங்கள் உள்ளன.  அவசர கால கீழ்தளம் செல்லும் பொத்தான், லிப்டி னுள்ளும், வெளியேயும் இருக்கும். இதனால் மின் சாரம் தடைபட்டால், லிப்டை இயக்க தொழில் நுட்ப வல்லுநரை வர வழைக்க வேண்டிய அவ சியம் கிடையாது. சக்கர நாற்காலியில் இயங்கு வோரும் இதைப் பயன் படுத்தும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய  மின் தூக்கி கள் வீட்டில் இருப்பது வீட் டின் மதிப்பை பல மடங்கு உயர்த்திக் காட் டும் என நிபவ் நிறுவ னம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment