சென்னை, ஜன. 27- இந்தியாவின் 74 ஆவது குடியரசு நாள் விழாவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது சமூக வலை தளப் பதிவில் பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவின் 74 ஆவது குடி யரசு நாளைக் கொண்டாடும் இவ் வேளையில், உலகின் மாபெரும் மக்களாட்சியாக நமக்கு மரியாதை யைப் பெற்றுத் தந்துள்ள மாண்பு களைக் காப்போம். வேற்றுமைகளும் அனைவரையும் உள்ளடக்கிய தன் மையும்தான் இந்தியாவின் மிகப் பெரும் வலிமைகள். அவற்றைப் போற்றவும், நம்மைப் பிரிக்க முனையும் சமூகத் தீமைகளை ஒழிக்கவும் உறுதியேற்போம்.
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment