தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி


தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்

கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி

காடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்ல

களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்

கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி

தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே


கட்டாக ஏருழவர்

பட்டாளம் கிளம்பிற்றே -- கட

கடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)


எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு

மங்கையர்கள் செந்தமிழில் பாடினார் -- நல்ல

திங்கள் கிடந்ததுபோல் எங்கும் அரிசியடி

தீம்பாலில் இட்டதனை மூடினால் -- மிகு

தித்திப்பிறிகொ தித்த அந்த முத்துக்கடல் பொங் கிற்றடி

எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு

மங்கையர்கள் செந்தமிழில் பாடினார்!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


No comments:

Post a Comment