இதற்கொரு முடிவே இல்லையா? பொன்னேரியில் அம்பேத்கர் சிலை சேதம் காவல்துறையினர் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

இதற்கொரு முடிவே இல்லையா? பொன்னேரியில் அம்பேத்கர் சிலை சேதம் காவல்துறையினர் விசாரணை

பொன்னேரி,ஜன.2- திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அருகே அம்பேத்கர் சிலையில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதிக்கான தலைவர்களின் சிலைகளை சேதப்படுத் துவோர் பெரிதும் இந்துத்துவா வாதிகளாக இருப்பதும், பின்னர் காவல்துறையினர் விசாரணையில் சேதப்படுத்தி யவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்றும் அவ்வப் போது தகவல்கள்  வெளியாவதுமாக உள்ளது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள துணிவில் லாத கோழைகளே இதுபோன்று அநாகரிகமான முறை களில் மறைந்த தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தச் செயலை பா.ஜ.க. தவிர்த்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எவ்வித பேதமுமின்றி எதிர்த்து வந்துள்ளனர்.  இந்நிலையில், திரு வள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம் பாக்கம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப் பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சிலையின் முகம், கையை சேதப்படுத்தி உள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். 

நிகழ்விடத்துக்கு விரைந்த சோழவரம் காவல்துறை யினர் அம்பேத்கர் சிலையை துணியால் மூடினர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதுதான் பிஜேபி ஆட்சியின் சாதனை!

வெளிநாட்டுச் செலாவணி 56,281-ஆக சரிவு

மும்பை,ஜன.2- இந்தியாவின் வெளிநாட்டுச் செலா வணி கையிருப்பு கடந்த 23-ஆம் தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில் 56,280.8 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவ டைந்த வாரத்தில், நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 69.1 கோடி டாலர் குறைந்து 56,280.8 கோடி டாலராக உள்ளது. அந்த வகையில், வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவைக் கண்டுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 57.1 கோடி டாலர் குறைந்து 56,349.9 கோடி டாலராக இருந்தது. 

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார நெருக் கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க மத்திய ரிசர்வ் வங்கி இந்தக் கையிருப்பை பயன்படுத்த வேண்டியிருந்ததால் அது பின்னர் குறையத் தொடங்கியது.

ஒட்டுமொத்த வெளிநாட்டுச் செலாவணியின் முக்கிய அங்கமான வெளிநாட்டுச் நாணய சொத்துகள் (எஃப்சிஏ) மதிப்பீட்டு வாரத்தில் 113.4 கோடி டாலர் குறைந்து 49,849 கோடி டாலராக உள்ளது.

அந்த வாரத்தில் தங்கம் கையிருப்பு 39.0 கோடி டாலர் அதிகரித்து 4,096.9 கோடி டாலராக உள்ளது.

பன்னாட்டு நிதிய சொத்து ஒதுக்கீடு (எஸ்டிஆர்) 80 லட்சம் டாலர் அதிகரித்து 1,819 கோடி டாலராக உள்ளது.

பன்னாட்டு நிதியத்தில் (அய்எம்எஃப்) நாட்டின் கையிருப்பு 4.5 கோடி டாலர் அதிகரித்து 515.9 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எங்கே கடவுள் சக்தி?

கோவிலுக்கு சென்ற இணையர் விபத்தில் உயிரிழப்பு

மும்பை,ஜன.2- இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஷீரடி கோவிலுக்கு சென்ற இணையர் பலியாகினர். அவர்களது குழந்தை நல்ல வாய்ப்பாக உயிர் தப்பியது. மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் மனோஜ் ஜோஷி (வயது 34). இவரது மனைவி மானசி (30). இவர்கள் தங்களது 3 வயது மகளுடன் மும்பையில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல முடிவு செய்தனர். அதன்படி மும்பை- நாசிக் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்.

தானே மாவட்டம் பிவண்டி அருகே உள்ள ஏவாய் பகுதியில் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது கன்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இந்த பயங்கர விபத்தில் நிகழ்வு இடத்திலேயே இணையர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினாள். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, காயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இணையர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக பிவண்டி தாலுகாக காவல்துறையினர் கன்டெய்னர் லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன. 2- ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment