2022ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதி னையும், ரூபாய் 5 லட் சத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்த விருது தனிப்பட்ட கலி. பூங் குன்றனுக்காகக் கிடைக்கப் பெற்றதல்ல; இலட்சோப லட்ச கருஞ்சட்டைத் தோழர்கள், தந்தை பெரியார் கொள்கையினை ஏற்று இந்த இனத்துக்கான வளர்ச் சிக்காகவும், உரிமைக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, பல்வேறு களப் பணிகளையும் மேற்கொண்டு போராட் டங்களில் ஈடு பட்டு வெஞ்சிறை ஏகிய கருப்பு மெழுகுவர்த்திகளான கருஞ்சட்டைத் தோழர்கள், சுயமரியாதைச் சுடரொளிகள், இன்றளவும் உழைத்துக் கொண்டுள்ள இயக்கத் தோழர்களின் பிரதிநிதியாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டதாக நான் கருதுகிறேன்.
அந்த வகையில் இந்த விருதினை வழங்கிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் 'திராவிட மாடல்' அரசின் தலைவர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது சார்பிலும், இயக்கத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'திராவிட மாடல்' என்றால் தந்தை பெரியாரின் தத்துவம் என்பது உள்ள டக்கம்.
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்துக்கு மட்டு மல்ல - எங்கெல்லாம் சமத்துவம் தேவைப் படுகிறதோ அந்த நாட்டுக்கெல்லாம் தேவைப்படும் தத்துவம்.
'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்று தந்தை பெரியார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். அந்த வகையில் திராவிடத் தத்துவ மூலவரான தந்தை பெரியார் உலகுக்கே சொந்த மானவர். என் னைப் பொருத்தவரை நான் ஓர் எளிய இயக்கத் தொண்டன். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஆகிய முப்பெரும் தலை வர்களிடம் பணியாற்றியிருக்கிறேன்.
நெருக்கடி காலத்தில் 'விடுதலை' ஆசிரியர் சிறைப்பட்ட போது, அன்னை மணியம்மையார் 'விடுதலை' யில் என்னை எழுதப் பணித்தார் - அந்த வகையில் நெருக்கடி காலம் ஒரு வகையில் எனக்கு 'உதவி'யிருக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யரோடு 1965 முதல் பயணித்து வந்துள் ளேன். தந்தை பெரியார் மறைவுக்குபின் 1974ஆம் ஆண்டு முதல் அவரின் நேர டிப் பார்வையில் பெரியார் திடலையே உறைவிட மாகக் கொண்டு என் பணியைத் தொடர்ந்து கொண்டுள்ளேன்.
இந்த நேரத்தில் ஆசிரியர் அவர் களுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஆணை பிறப்பித்தார்.
அவருக்குப்பின் வந்த ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது.
"திராவிட மாடல்" ஆட்சி நடத்தும் நமது மதிப்புக்குரிய முதல் அமைச்சர் அவர்கள் மீண்டும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்றுமாறு இந்தத் திருவள்ளுவர் திருநாளில், விருதுகள் வழங்கப்படும் நாளில் கேட்டுக் கொள் கிறேன்.
தந்தை பெரியார் பெயரிலான அரசு விருதினைப் பெற்றுக் கொண்ட இந்நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். முதல் அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றி என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் செய்தி யாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment