திறந்தவெளி.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

திறந்தவெளி....

"கர்ணன் பிறந்தான், எங்கள் கர்ணன் பிறந்தான்!"

* தாமரை மேடையில் நாடகம் நடக்கிறது. மோடிக்கு கர்ணன் வேடம்.  

அமித் ஷா பாடிக் கொண்டே மேடையில் நுழைகிறார் .. ‘‘கர்ணன் பிறந்தான், எங்கள் கர்ணன் பிறந்தான்.. புதுக் கவிதைகள் பிறந்ததம்மா.. மன்னன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறந்ததம்மா..!  என்ன கொடுத்தான், எதைக் கொடுத்தான்!

 அதை அதானி அறிவாரம்மா,  அம்பானியும் அறிவாரம்மா.. வேற யாரும் அறியாரம்மா’’..!  

மோடி பாட்டை ரசித்துக் கேட்கிறார். 

* சேது சமுத்திரத் திட்டம் ஞாபகம் இருக்கா? இலங்கைக்குப் போற வழியிலே பகவான் ராமர் கட்டிய பாலம் இருக்குன்னு ஒரு கதையைக் கட்டி விட்டோம். இந்தியாவில உள்ள துறைமுகங்களுக்கு வர்ற கப்பல்கள் இலங்கையைச் சுத்தித்தான் இந்தியாவுக்கு வரணும். எரிபொருள் செலவு அதிகம்.. பயண நேரமும் அதிகம். இதையெல்லாம் மிச்சம் பண்ணத்தான் சேது சமுத்திரத் திட்டம் போட்டார்களாம். ஆனா நாங்க ராமர் பாலத்தை இடிக்கவிட மாட்டோம்னு சொல்லிட்டோம். அவ்வளவுதான். நாங்க சொல்றதுதான் சட்டம். எங்களை யார் கேட்க முடியும்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு தீர்ப்பு எழுதணும். அப்படி எழுதினாத்தான் அவங்க நீதிபதிகளாத் தொடர முடியும். இல்லேன்னா அவங்க கிட்ட எந்த வழக்கும் போகாது. ஒரு வழியா அந்தத் திட்டத்தை ஒழிச்சுக் கட்டினோம். இப்ப யாருக்காவது சேது சமுத்திரத் திட்டம் ஞாபகம் இருக்கா? இல்லேல்ல? உங்க மறதி மேலே நம்பிக்கை வச்சுத்தான் நாங்க பல விஷயங்களைச் செஞ்சுக்கிட்டே போறோம்.. 

* இந்திய வரலாறுங்கற பேர்ல பொய்களைப் பரப்புவாங்க.. அவுரங்கசீப் பத்திப் பேசுவாங்க. ஆனா அவர் இடிச்ச இந்துக் கோவில்களைப் பத்திப் பேச மாட்டாங்க.. 1857 சுதந்திரப்  போராட்டத்தில இந்துக்களும் முஸ்லிம்களும் இணைஞ்சு நின்னு போராடினதைப் பத்திப் பேசுவாங்க. பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தைப் பத்திப் பேசுவாங்க. ஆனா அவுரங்கசீப்பை எதிர்த்துப் போராடின குரு கோவிந்த சிங் பத்திப் பேச மாட்டாங்க. 

ஆனா நான் பேசறேன். முஸ்லிம்கள் படை யெடுப்பை எதிர்த்து நடந்த வீரதீரப் போராட்டங்களைப் பத்தி நான் பேசறேன். இந்தியாவுக்கு எதிரி யாரு? முஸ்லிம்கள்தான். பிரிட்டிஷ்காரங்க பாரத தேசத்தை விட்டு வெளியே போயிருக்கவே வேண்டாம். போக வேண்டியவங்க முஸ்லிம்கள்தான். அவங்களுக்குத் தான் பாகிஸ்தான்னு ஒரு நாடு இருக்கே? நாங்க சொல்றதை நம்பறவங்கதான் தேசபக்தர்கள்.. மற்றவர்கள் தேச விரோதிகள்..! 

* ராமருக்குக் கோவில் கட்டிட்டோம். இனிமே கொஞ்ச நாளைக்கு பகவான் கிருஷ்ணரைப் புடிச்சுக்கப் போறோம். கிருஷ்ணருக்கு உலகத்திலேயே உயரமான சிலையை எழுப்பப் போறோம். படேல் சிலை, மாவீரன் சிவாஜி சிலையெல்லாம் அப்பப்ப தொட்டுக்கற ஊறுகாய்தான்.. !

* ஆன்லைன்ல ஆடறது சூதாட்டம்தான். ஒத்துக்கறோம். ஆனா அதை நடத்தறவங்கள்லாம் எங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களாச்சே? அப்புறம் எப்படி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கற சட்டத்துக்கு ஆர்.என். ரவி அனுமதி கொடுப்பாரு? நடக்கற கதையைப் பேசுங்க.. !  

* இமாச்சலப் பிரதேசத்தில் எவ்வளவோ பிரச்சாரம் செஞ்சு பார்த்தோம். ஆனா 'பாரத் ஜோடோ யாத்ரா'ன்னு எங்களைப் பார்த்துக் காப்பியடிச்சு ஒரு பேரை வச்சுக்கிட்டு, யாத்திரை போய் ராகுல் பேரு வாங்கிட்டாரு. நாட்டிலே ஏமாந்தவங்கள்லாம் அவர் கூட நடந்து போயிருக்காங்க. இப்ப இமாச்சலப் பிரதேசத்தில ஆட்சி அமைச்சிருக்கலாம். அப்படியே நாங்க விட்டுருவோமா? அங்கே மட்டும் பேரம் படியாமயா போயிடும்? பார்த்துடுவோம்..!  

* இனிமே ஆவின் பால் கிடையாது..அதானி பால்தான்! கோவில்பட்டி கடலை மிட்டாய் கிடையாது.. அம்பானி கடலை மிட்டாய்தான்! பண்ருட்டி பலாப்பழம் கிடையாது.. நித்யானந்தா பலாப்பழம்தான்! பொட்டாசியம் உரம் கிடையாது.. ஜக்கி வாசுதேவ் உரம்தான்!  வரலாற்றையே மாத்தி எழுதிக்கிட்டிருக்கற எங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

நன்றி: ‘தீக்கதிர்‘, 1.1.2023


No comments:

Post a Comment