நீங்களும் தெரிந்து கொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

நீங்களும் தெரிந்து கொள்வீர்!

[30-12-2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி, எம். ஏ., பி.எல்., அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழாவில் வேலூர் வி.அய்.டி. வேந்தர் முனைவர். ஜி. விசுவ நாதன் அவர்கள் ஆற்றிய உரையில் நான் அறிந் தவைகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.!]

நம்முடைய வரலாற்றிலே பொ.ஆ.பின் 300, 400 ஆண்டு காலத்தை இருண்ட காலம் என்று சொல்வார்கள். அது இருண்ட காலம் அல்ல. சமணர்களோ, அல்லது பவுத்தர்களோ, அரசர் களாக இருந்த காலம். 1550 ஆண்டுகளுக்கு முன்பாக வஜ்ஜிர நந்தி என்ற சமண முனிவரால் மதுரையில் திராவிடச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

தற்போது உள்ள திராவிடர் கழகம் என்ற பெயரிலே, 1908-ஆம் ஆண்டு விருது நகரைச் சார்ந்த சிவஞானயோகி என்பவர் மதுரைக்கு சென்று திராவிடர் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென் னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய ஆங்கில பத்திரிகையின் பெயர்தான் ஜஸ்டிஸ். அந்த பத்திரிகையின் பெயரே பின்னர் ஜஸ்டிஸ் கட்சி யாக ஆகி விட்டது. 

பார்ப்பனர்களுக்கு தனியாக சாப்பாடு, பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனியாக சாப்பாடு போடவேண்டும். என்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு கொள்கைகள் அடிப் படையில் 1925-இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

எந்த மாநிலம் கல்வியில் முன்னேறி இருக் கிறதோ அந்த மாநிலம் பொருளாதாரத்திலும் முன்னேறி இருக்கிறது. அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள் அனைவரையும் படி, படி என்று சொன்னார். எனவே தான் எங்களின் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்திற்கு பெரியார் நூல்நிலையம் என பெயர் சூட்டியுள் ளேன். எங்களின் பல்கலைக் கழகத்தில் ஆங் கிலம் படித்த மாணவர்கள் தற்போது 84 நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

1937-இல்  இராஜாஜி  ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கி சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டு இளைஞர்கள் 

மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டு ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். 

பிறகு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற குன்றக்குடி அடிகளார் அவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ஹிந்தியை ஏற்றுக் கொள்ளாததால் நானும் எனது கொள்கையை மாற்றிக் கொண் டேன் என  இராஜாஜி ஒரு பேட்டியின் போது அப்போது கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போது அறிஞர் அண்ணா அவர்களிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேட்டபோது அறிஞர் அண்ணா அவர்கள், நான் பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன், பிள்ளையார் சிலைக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் என சாதுரியமாக பதிலளித்தார். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தான் கொண்ட கொள்கைகளை விட்டுக்கொடுக் காமல், கண்டிப்பாகவும், கறாராகவும் இருந்தார்.

நாம் எங்கிருந்தாலும் தந்தை பெரியார் அவர் களின் பகுத்தறிவு கொள்கையினையும் அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் கொள்கை யினையும் மறந்து விடக்கூடாது!

- த. சண்முகசுந்தரம்,

கடலூர்-3


No comments:

Post a Comment