தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை,ஜன.13- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புபயிற்சி, ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் நடை பெறுகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்;

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய கருத்துருகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் மதுரையில் நேரடி முறையில் நடத்தப் பட உள்ளது.

இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. 

பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment