2023 ஆம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் நேற்றுமுன்தினம் (9.1.2023) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை ஆளுநர் வாசிக்கவில்லை. மேலும், முதலமைச்சர் உரை வாசித்தபோது ஆளுநர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Wednesday, January 11, 2023
சென்னையில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment