சென்னை, ஜன. 30- சென்னை, பள்ளிக்கரணையில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை நேற்று (29.1.2023) நடத்தியது.
இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு இப்பேர ணியை காவல்துறை கூடுதல் இணை ஆணையர் அனந்த குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவ மனையில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி பல்லாவரம் பாலம் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடையும் வகையில் மொத்தம் 16 கி.மீ. தூரத்துக்கு நடத்தப் பட்டது. டாக்டர் காமாட்சி நினைவு குழும மருத்துவனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன், இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, இயக்குநர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி மற்றும் ஆலோசகர் டாக்டர் கே.எம். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment