முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் இரா.பெரியசாமி (வயது 80) காலமானார். மலேசிய திராவிடர் கழகத்தில் 1969 ஆம் ஆண்டு முதல் இணைந்து இறுதிவரை பெரியார் தொண்டராக சிறப்பாக செயலாற்றி யுள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மலேசிய திராவிடர் கழகத்தில் சுங்கை வே கிளை அமைப்பாளராக தமது பணியை தொடங்கி இது நாள் வரை அக்கிளையின் தலைவராக செயல்பட்டார். சுமார் அய்ந்து ஆண்டுகள் மலேசிய திராவிடர் கழகத்தில் தேசியத் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரின் மறைவு திராவிடர் கழகத்திற்கு பேரிழப்பாகும்.
No comments:
Post a Comment