நியூயார்க்,ஜன.22- இந்த ஆண் டின் பன்னாட்டு கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக் கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அய்.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது. பன்னாட்டு கல்வி தினம் தொடர்பான தீர்மானம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அய்.நா பொது அவையால் ஏற்கப்பட்டது. இதை யடுத்து 2019 முதல் பன்னாட்டு கல்வி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
5ஆவது பன்னாட்டு கல்வி தினம் நாளை மறுநாள் 24ஆம் தேதி கொண் டாடப்பட உள்ள நிலையில், இந்த தினத்தை ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக அய்.நா.வின் கல்வி, அறிவியல் மற்றம் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆப்கன் பெண்களுக்கு மறுக்கப் பட்ட கல்வி திரும்ப வழங்கப்படு வதை வலியுறுத்தும் நோக்கில் அய்.நா. தலைமையகங்களில் அன் றைய தினம் கருத்தரங்கங்கள் நடத் தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அய்.நா. தலைமையகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், அய்.நா. பொதுச் செயலாளரும், அய்.நா. பொது அவையின் தலைவருமான ஆன்டனியோ குட்டரெஸ், யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆப்கன் பெண்களுக்கு மீண்டும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஆட்ரே அசோலே, ''உலகில் உள்ள எந்த நாடும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கக்கூடாது. கல்வி என்பது பன்னாட்டு மனித உரிமை. அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். ஆப்கன் பெண்களுக்கு மறுக்கப் பட்டுள்ள கல்வி உடனடியகக் கிடைக்க பன்னாட்டு சமூகம் பொறுப்பேற்க வேண்டும். பெண் களுக்கு எதிரான போர் நிறுத்தப் பட வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 80 சதவீத பெண் குழந்தைகளுக்கு(சுமார் 25 லட்சம் சிறுமிகளுக்கு) கல்வி மறுக்கப்பட் டுள்ளது. உயர் கல்வி பெறும் வயதுள்ள பெண்கள் 12 லட்சம் பேருக்கு உயர்கல்வி மறுக்கப்பட் டுள்ளது. ஆப்கனில் தலிபான்களின் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்து பெண் கல்விக்கு எதிரான; பெண் களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment