குமரி மாவட்டத்திற்கு வரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

குமரி மாவட்டத்திற்கு வரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

நாகர்கோவில், ஜன. 14- நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி  மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.  

மாநில அமைப்புச் செயலாளர் வே. செல்வம் சிறப்புரை ஆற்றி னார்.  பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு , மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் கருத்துரை ஆற்றினர். மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் இரா.சுரேசு, அனின் ஸ்டெபின் ராஜ் மற்றும் பலரும் பங்கேற்றனர்.  கன்னியா குமரி நகரக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் நன்றி கூறினார்.

சமூக நீதி பாதுகாப்பு, ‘திராவிட  மாடல்' பரப்புரை பெரும்பயண பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க வரும்  திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு  குமரிமாவட்ட   திராவிடர்கழகம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்குவது - பொதுக்கூட்டத்தை சிறப்பாக பிப்ரவரி 24 அன்று நாகர்கோவிலில் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் பேசிவரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடல் கூட்டத் தில்  குமரி மாவட்ட கழகம், இளை ஞரணி,   பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம்  இவற் றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment