பீகாரில் சமூகநீதிப் போராளியாக இறுதி வரை திகழ்ந்தவர் பொறியாளர் சரத்யாதவ் (வயது 75) அவர்கள். மேனாள் ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.
ஆழ்ந்த அரசியல் ஞானம் மிக்க அனுபவசாலி. ஏழுமுறை எம்.பி. மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர் நீண்டகாலம் அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்து பிறகு அதைவிட்டு வெளியேறி லாலு பிரசாத் அவர்களின் தலைமையிலான ராஷ்டிர ஜனதா தளத்தில் இணைந்தவர். சில காலமாக உடல் நலக் குறைவுடன் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது மறைவு சமூகநீதிப் போராட்ட வர லாற்றில் ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!
திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை அவரது அன்பு மகள் மற்றும் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.1.2023
No comments:
Post a Comment