1931ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பார்ப்பனர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால் அவர்களை பார்ப்பனர் சமூகத்தினர் தங்கள் ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தனர். சங்கராச்சாரியார் அப்பகுதிக்கு வந்திருந்தபோது விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த பார்ப்பன சகோதரர்கள் அவருக்கு காணிக்கை செலுத்த விரும்பினார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிழைப்பிற்காக உடலால் உழைப்பது என்பது பாவ காரியமாகும். அந்த பாவத்தை செய்த பார்ப்பனர்களிடமிருந்து காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று சங்கராச்சாரியார் கூறிவிட்டார். அத்தோடு இதுகுறித்துஇந்த பார்ப்பன சகோதரர்கள் காந்தியாருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டனர். அதற்கு காந்தியார் ஒருவன் கலப்பையை கையாலேயே தொடுவதே பாவம் என்று கூறினால் இது உழைப்பைக் கேலி செய்வதாகும் என்று பதிலளித்தார்.
பார்ப்பனரும் உழவுத் தொழிலும்
No comments:
Post a Comment