வாழப்பாடி, ஜன. 1- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் வாழப்பாடி வருகை யையொட்டி வாழப்பாடி அமிர்தம் சுகுமார் இல் லத்தில் 30.12.2022 அன்று மாலை 4 மணியளவில் ஆத்தூர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் கு.சுகுமார் தலைமை வகித்தார். மண்டல இளைஞரணி செயலாளர் ப.வேல்முரு கன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் த.வானவில், மண்டல செயலாளர் இரா.விடு தலை சந்திரன், நீ.சேகர், கூத்தன், வெ.அண்ணா துரை, அ.சுரேஷ் உள் ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.செயராமன், பகுத்தறிவா ளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவ ணன் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.
தோழர் சத்தியமூர்த்தி, சங்கர் பெரியார் கல்வி நிறுவன தாளாளர் தோழர் மோகன், வாழப்பாடி ராஜா மாவட்ட மாண வர் கழக தலைவர் தோழர் அழகுவேல் ஆகியோர் கள் கூட்டத்தில் பங் கேற்று உரையாற்றினார்.
அமிர்தம் சுகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார். அனைவருக் கும் தேநீர் வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்
1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழப்பாடிக்கு வருகை தர இசைவு தந்தமைக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. நீண்ட நாட்களுக்கு பிறகு வாழப்பாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சிறப்பாக மேளதா ளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்க இக்கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment