ஒன்றிய நிதிநிலையறிக்கையின் சில பகுதிகள் திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

ஒன்றிய நிதிநிலையறிக்கையின் சில பகுதிகள் திருட்டு

 நிதித்துறை ஊழியர் கைது 

புதுடில்லி, ஜன.22- வரும் நிதியாண்டுக் கான பொதுபட் ஜெட் பிப்ரவரி 1ஆம்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதிநிலையறிக்கையின் முக்கிய தகவல் களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள் ளனர். நடப்பு ஆண்டுக்கான நாடாளு மன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி  தொடங்குகிறது. இந்த ஆண் டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இரு அவைகளின்  கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யப்படும்.  இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

பொதுவாக நிதிநிலையறிக்கை தயாரிக்கும் பணிகள் மிகுந்த எச்சரிக்கை யுடன், நம்பகத் தன மான அதிகாரிகளை கொண்டு தயாரிக்கப்படும். இது தொடர்பாக நிதித்துறை அலுவலக அதிகாரி களுக்கு  கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்படும். 

ஆனால், அதையும் மீறி, நிதிநிலையறிக்கை உரையின் சில பகுதிகள் பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்ட தகவல் வெளியானது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், நிதி அமைச்ச கத்தில் பணியாற்றும் ஊழியர் மூலமா கவே பாகிஸ்தா னுக்கு ‘லீக்’ ஆகியுள்ளது தெரிய வந்தது.

இந்த தேச விரோத செய லில் ஈடுபட்டது, நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரி சுமித் என்பவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

 இவர், வாட்ஸ் அப் வாயிலாக நிதிநிலையறிக்கையின் சில பகுதிகளை பாகிஸ் தானை சேர்ந்த வர்களுக்கு பகிர்ந்துள் ளார். இதற்காக அவர் சிலரிடம் பணம் வாங்கி உள்ளதும் விசாரணையில் அம்பல மானது.

இதையடுத்து,   அவர் பயன்படுத் திய கைபேசி கைப்பற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுமித் மீது குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 மேலும், வேறு ஏதேனும் அரசு தொடர்பான ரகசிய தகவல்களை அவர் வெளிநாடுகளுக்கு பகிர்ந் துள்ளாரா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமித் உடன் பணியாற்றும் மற்ற ஊழியர் களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

 சுமித்தின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக டில்லி வட்டார செய்தி கள் தெரிவிக்கின்றன.  

டில்லி காவல்துறையின் வெளியிட் டுள்ள அறிக்கையில் டேட்டா ஆப ரேட்டராக பணிபுரியும் சுமித் என்ற ஒப்பந்த ஊழியர் உளவு நெட் வொர்க் குடன் இணைந்து கைது செய்யப்பட்டு உள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு நிதி அமைச்சகத்தின் தகவல்களை கசியவிட்டு, வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதாக கூறப்படு கிறது.

No comments:

Post a Comment