கரூர், ஜன. 17- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 14.1.2023 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் முத்து லாடம் பட்டி மா.ராமசாமி, அமைப்பா ளர் கலை இலக்கிய அணி செய லாளர்அவர்களின் இல்லத்தில் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் நடை பெற்றன. கரூர் மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து, அனைவ ரையும் வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர்கள், சே.அன்பு, உ.வைரவன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
வருகின்ற பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்துவது, மற்றும் 5ஆம் தேதி கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் கலந்து கொள்ளும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடத்துவது சம்பந்த மான கலந்துரையாடல் கூட்டத் திற்கு சிறப்பு அழைப்பாளர் கழகத் தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் கீழ்க் கண்ட தீர்மானங்கள், நிறைவேற் றப்பட்டன.
1), குளித்தலை நகர தலைவரும் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சந்தானகிருஷ்ணன் மகனுமான செல்லத்துரையின் மறைவிற்கு மாவட்ட குழு கூட் டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
2), வருகின்ற 8-2-2023 அன்று சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பய ணத்தின் தொடர்ச்சியாக குளித் தலைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது, எனவும், மாலை நடைபெறும் பரப்புரை பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, என்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்படு கிறது.
3),8.2.-2023 அன்று குளித் தலை பரப்புரை பொதுக்கூட்டத் திற்கு ஒத்த கருத்துள்ள தோழ மைக் கட்சி பொறுப்பாளர்களை அழைப்பது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மோகன் தாஸ், திருச்சி மாவட்ட செயலாளர், திருச்சி முபாரக் அலி, கரூர் மாவட்ட செயலாளர் காளி முத்து, மாவட்ட துணைச் செய லாளர் வே.ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள், சே.அன்பு, கட் டளை உ.வைரவன், சரோஜா அம்மாள், கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், இளைஞர் அணி செயலாளர் காந்திகிராமம் குமார் ,அமைப்பாளர் ராஜா, மாணவர் கழக நவீன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜா மணி, கிருஷ்ணராயபுரம் ஒன் றிய தலைவர் பெருமாள், செய லாளர் ராமலிங்கம், மலையம் மன், வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றி உரையை மாவட்டத் துணைச் செயலாளர் வே.ராஜு வழங்கினார்.
No comments:
Post a Comment