புதுடில்லி, ஜன 13 ராமர் பாலத்தைத் தேசிய பாரிம்பர்யச் சின்னமாக அறிவிப்பது தொடர் பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்க வேண்டி கடந்த 2007-இல் சேது சமுத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த நாள் முதல் வரை இந்த வழக்கில் இன்னும் முடிவு எட்டப் படாமல் இருக்கிறது. கடைசியாகக் கடந்த நவம்பரில், பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளித்த பிறகும் ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக் காமல் இழுத்தடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ம ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்குவந்தது. அப்போது ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, இது ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினார்.அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே கால அவகாசம் அளித்தும் ஒன்றிய அரசு பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாததால், ஒன்றிய அமைச்சரவைச் செயலாளருக்கு சம்மன் அனுப்புமாறு, சுவாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட் டது. இருப்பினும் நீதிமன்ற அமர்வு அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், ஒன்றிய அரசு பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத் திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்ற அமர்வு கால அவகாசம் அளித்தது.
No comments:
Post a Comment