"போலி ஸ்டிங் ஆபரேஷனா?" பா.ஜ.க. விமர்சனத்திற்கு டில்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

"போலி ஸ்டிங் ஆபரேஷனா?" பா.ஜ.க. விமர்சனத்திற்கு டில்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி

புதுடில்லி,ஜன.22- டெல்லி நிகழ்வு ஒரு போலி ஸ்டிங் ஆபரேஷன் என்று விமர் சித்துள்ள பாஜகவுக்கு டில்லி மகளிர் ஆணையத் தலைவர் பதிலடி கொடுத் துள்ளார்.

டில்லி மகளிர் ஆணையத் தலைவ ராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவர் அண்மையில் தனது ட்விட்டரில் "டில்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டி ருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார்  ஓட்டுநர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.

மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது புகாரின் அடிப்படையில் கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

பாஜக விமர்சனம்: இந்நிலையில் இந்த நிகழ்வே போலி ஸ்டிங் ஆபரேஷன். டில்லி காவல்துறையினர் மோசமாக அடையாளப்படுத்த வேண் டும் என்பதற்காக டில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இவ்வாறு செய்துள்ளார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஸ்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னைப் பற்றி அவதூறுகளை, கேவலமான பொய்களை உரைப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன். இந்த பொய்களால் நான் அஞ்சிவிடமாட்டேன். எனது குறுகிய காலத்தில் நான் நிறைய பெரிய வேலை களை செய்துள்ளேன். நான் பலமுறை இதுபோன்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். ஆனால் இவை எல்லாம் என்னைத் தடுக்காது. ஒவ்வொரு முறை நான் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் அது என் உள்ளே உள்ள நெருப்பை உன்னும் வலிமையாக்கியுள்ளது. எனது குரலை யாரும் அடக்க முடியாது. நான் தொடர்ந்து போராடுவேம். என் உயிர் உள்ளவரை அது தொடரும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment