நெய்வேலி, ஜன. 23- நெய்வேலி நகர கழக இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவரும் 130 முறைகளுக்கு மேல் குருதிக்கொடை வழங்கியவரும் மறைந்த பலரின் உடல்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் கொடை வழங்கிட உதவியவரும் ஆன யோ.ராஜா சிதம்பரம் மறைவுற்றதை முன்னிட்டு அவரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 8.1.2023 அன்று காலை 11 மணியளவில் எஸ்.எம்.இ. ஆபரேட்டர் சங்க கட்டடத்தில் தஞ்சை மண்டல கழக காப்பாளர் வே.ஜெயராமன் தலைமை யில் நடைபெற்றது.
தி.மு.க மேனாள் நகர செயலாளர் புகழேந்தி, தொ.மு.ச.தலைவர் திரு மாவளவன், திமுக நகர பொறுப்பாளர் பக்கிரி சாமி ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
நெய்வேலி நிலக்கரி நிறுவன உயர் அதிகாரி சதீஷ் பாபு மறைந்த தோழரின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நினைவுரை ஆற்றினார்.
நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் ஞான சேகரன், ராவணன், பாஸ் கர், கண்ணன், மாணிக்க வேல், ரத்தின சபாபதி, இசக்கிமுத்து, மாவட்ட தலைவர் தண்டபாணி, அமைப்பாளர் மணி வேல், திமுக தர்மலிங்கம், திராவிடன் ஒன்றிய தலை வர் கனகராஜ், பாவேந்தர் விரும்பி, ராமநாதன், சிங்கப்பூர் அதியமான், எஸ்.எம்.இ.ஆபரேட்டர் சங்க நிர்வாகிகள், ஓபிசி சங்க நிர்வாகி புருஷோத்தமன் மற்றும் மறைந்த தோழரின் தாயார், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் என பலதரப்பட்டவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். சிதம்பரம் குருதிக்கொடை சங்க நிர்வாகி ராமச்சந்திரன், குருதிக்கொடை கண்கொடை உடல் கொடை அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
No comments:
Post a Comment