அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்
சென்னை, ஜன 13 உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற் கொள்ள நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தொடக்கி வைத்தார்.
சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அந்த வாகனங்களை அவர் அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச் சர்மா.சுப்பிரமணியன் கூறிய தாவது: உணவு பொருள்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும், சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளை யங்கோட்டை, தஞ்சாவூர்ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப் பாய்வு கூடங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த ஆய்வகங்களில் கடந்த 2021 முதல் 2022 வரை, 34,980 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, தரமற்ற 9,671 உணவு கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 6,542 வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளின் கீழ் உரிமையியல் நீதிமன்றத்தின் வாயிலாக ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவியல் நீதிமன்றத்தில் 1,264 வழக்குகள் தொடரப்பட்டு, ரூ.2.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் பயன்பாட் டுக்காக ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் நான்கு நடமாடும் உணவு பகுப் பாய்வக வாகனங்கள் செயல்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் உணவில் கலப்படம் கண்டறியும் வசதிகள், விளக்கப் படங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதன் வாயிலாக, குளிர்பானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு சர்க்கரை அளவு உள்ளதா, பாலில் கொழுப்பு தன்மை எவ்வளவு உள்ளது உள்ளிட்டவற்றை அங்கு பரி சோதிக்கலாம். மாநிலம் முழுவதும் அந்த வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை ஆய்வு செய்யும். பொதுமக்கள் தரமற்ற உணவு பொருள்கள் குறித்து 104 மற்றும் 94440 42322 என்ற எண் களில் புகார் அளிக்கலாம். ஒப்பந்த செவிலியர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் ஏற்கனவே பெற்ற ஊதியத்தை விடக் கூடுத லான ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்புடன், மாவட்ட சுகாதார மய்யம் வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு சில சங்கத்தை தவிர மற்றவர்கள் அந்த முடிவை ஏற்று கொண்டுள்ளனர் என்றார் அவர். இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்ப.செந்தில்குமார், உணவு பாது காப்புத் துறை ஆணையர் லால்வேனா, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment