துபாயில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

துபாயில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னை, ஜன. 22- ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபாய் உலக வர்த்தக மய்யத்தில் மார்ச் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பொருளாதார நிறுவன தலைவர் வி.ஆர். எஸ். சம்பத் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: 9 -ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் மூலம் பொருளாதார மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பையும் கூட்டுறவின் உருவாக்க பன்னாட்டு சமூகம், வணிகத் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுடன் உரையாடல் நடத்துவது,

பொருளாதார மேம்பாட்டுக்காக சுதந்திரமான வணிகம் மற்றும் தொழில்சார் பணிகளை பெண்களை ஊக்குப் படுத்துவது, அரசு அதிகாரிகள் சமூகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், அமைச்சர்களை அழைத்து அமைதி மற்று மதநல்லி ணக்கத்தை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியை பற்றி விவாதிகப்படும். கல்வி, தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் பெண்க ளுக்கு அதிகாரமளித்தல் தொடர் பாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் தொழிலதிபர் கள், தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினர் களாக தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பர சன், விஅய்டி வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு அரசு செயலாளர்கள் கிருஷ்ணன், செல்வி அபூர்வா, அருண் ராயன், சிஜி தாமஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்றார் அவர். இந்த சந்திப்பின் போது வரவேற்புக் குழுத் தலைவர் அபித்ஜூனைத், தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம்,வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந் தனர்.

No comments:

Post a Comment