பொங்கலோ பொங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

பொங்கலோ பொங்கல்

 - கவிஞர் கலி.பூங்குன்றன்

போகி என்ற

சொல்லுக்குப்

போக்கி என்று

பொருள் கொள்!


ஆரிய வருணாசிரமக்

கருவில் பிறந்த

பழைமைகளைப்

போக்கி என்று

பொருள் கொள்!


பொங்கல் என்ற

சொல்லுக்கு

பொங்கி எழு என்று

பொருள் கொள்!


பாசிச சக்திகளைப்

பொங்கி அழிக்கும்

புயல் என்று

பொருள் கொள்!


மாடு என்ற

சொல்லுக்குச்

செல்வம் என்று

பொருள் கொள்!


உழைக்கும் மக்களின்

செல்வத்தை

உறிஞ்சி கொழுக்கும்

ஒவ்வாமையாம்

இந்துத்துவா நோயின்

ஒவ்வொரு கல்லையும்


உடைத்தெறிய

உன் தோளைத் தூக்கு!


பண்டிகையல்ல - நம்

பண்பாட்டின்

அடையாளம்!


வேளாண் விழாவை

பாவத் தொழில் எனும்

பார்ப்பனீயப்

படை எடுப்பின்

பாத எலும்பை உடை!


காணும் பொங்கலில்

காண்போர்க்கெல்லாம்

கூற்றாக கூறு இதையே!

பொங்கலோ பொங்கல்!


தந்தை பெரியார் தம்

கைத்தடியைச்

சிலம்பமாக்கி

விளையாடிக்

காட்டுவோம்!


வீழட்டும் ஆரியம்

விளையட்டும்

திராவிட ‘வீரியம்‘

பாரெங்கும்

பரவுக

திராவிட மாடல்!


பொங்கலோ

பொங்கல்!

No comments:

Post a Comment