திருப்பத்தூர்,ஜன. 30- திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சகக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி 28.1.2023 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது.
இக் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படைப்பகம் என்ற புத்தக அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. துவக்க நாளில் பெரியார் அரங்கிற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவையும், சாகித்திய அகாதமி விருது பெற்ற பொன்னீல னையும், மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் வரவேற்று பெரியார் புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார்.
காலை முதல் கழக தோழர் களாகிய மாநில மகளிர் பொருளாளர் அகிலா, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், விடுதலை வாசகர் அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மகளிரனி விஜயா அன்பழகன், மண்டல இளைஞ ரணி செயலாளர் சிற்றரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்செல்வன், நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி, நகர தலைவர் காளி தாஸ், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனக ராஜ், சோலையார்பேட்டை ஒன் றிய அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனி சாமி நகர அமைப்பாளர் முருகன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கற்பகவல்லி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சபரிதா , தோழர்கள் பெரியார் செல்வம், முத்து, குழந்தையேசு என்று ஏராளமானோர் பங்கேற்று சிறப் பித்து புத்தகங்களை வாங்கியும் சென்றனர்.
அரங்கின் முன் வைத்துள்ள தந்தை பெரியார் சிலை அருகே பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டு பெரியார் புத் தகங்களை வாங்கி சென்றனர்.இந்த புத்தக திருவிழா 28. 01. 2023 முதல் 05.01.2023 வரை தொடர்ந்து ஒன் பது நாட்கள் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment