மும்பையில் பெரியார் பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

மும்பையில் பெரியார் பிறந்தநாள் விழா!


மும்பை, ஜன. 21- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா -  07.01.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பாண்டுப்பிரைட் உயர்நிலைபள்ளி, பெரியார் பெருந்தொண்டர் வீ.தேவதாசன் நினைவரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முதல்நாள் விழா!

இவ்விழாவில்  மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோனி வர வேற்புரையாற்றினார்,  மும்பை பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அ.இரவிச் சந்திரன் தொடக்கவுரையாற்றினார் மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் படத்தை ஜஸ்டினா ஜேம்சும் , அன்னை மணியம்மையார் படத்தை வாசுகி இசைச்செல்வன் அவர்களும் திறந்துவைத்தனர்

ஜேம்ஸ் தேவதாசன், அன்பழகன் பொற்கோ, ந. வசந்தகுமார், வே.ம.உத்த மன், சோ. ஆசைத்தம்பி, என்.வி.சண்முகராசன், மாறன் ஆரியசங்காரன், ம.இராஜசேகர், ஆ.டென்சிங், அய்.செல்வ ராஜ் , க.வளர்மதி, கோ.சீனிவாசகம், இரா.தங்கபாண்டியன் மற்றும் சங்கர் டிராவிட் ஆகியோர் முன்னிலை .வகித்தனர்

தமிழ்லெமுரியா அறக்கட்டளை நிறுவனர்  சு.குமணராசன், மும்பை புற நகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்  கருவூர் பழனிச்சாமி, தி.மு.க பேச்சாளர் முகமது அலி ஜின்னா, ஆவடி நகர திராவிடர் கழகச் செயலாளர் இ.தமிழ்மணி, மகிழ்ச்சி மகளிர் பேரவை பொறுப்பாளர் வனிதா இளங்கோவன், மும்பை திராவிடர் கழகத்தின் செயல்வீரர் பெரியார் பாலாஜி ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள். 

சே.மெ.மதிவதனி சிறப்புரை

சிறப்புரையாக திராவிடர் கழகத் தின் மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தையும் திராவிடர் இனத்தின் பெருமைகளையும் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார் 

சிறப்பு அழைப்பாளர்களாக கே.வீ. அசோக்குமார், 'பா.சங்கரநயினார், காரை.கரு.இரவீந்திரன், ச.சி.தாசன், முனைவர் வதிலை பிரதாபன், டி.எம்.நரசிம்மன், டி.அப்பாதுரை, உ.பன்னீர் செல்வம், சி.கல்பனா, சி.சஹானா, பா. செல்லப்பாண்டியன், தருண், சுசால் சாப்லே, ஆர்.டி.இராஜன், தேவ ஜெப மணி, ஆர்.ஜெபத்தீயான், கே.கணேசன், க.அறிவுமதி, ஆர். அக்சித், சே.மெ.கவி நிஷா, சுகந்தி தமிழ்மணி, நன்னன் தமிழ் மணி, இனியன் தமிழ்மணி மனோன் மணி, சுரேஸ்குமார், பூமாரி, வீரை.சோ.பாபு, ஜோ.மாரி, வ.இராசேந்திரன், பி.இராசா, நெல்லை பைந்தமிழ், ஈ.குமாரச்செல்வன், ஜெ.முகுந்தன், பாலு மற்றும் பாபு மகாவிஷ்ணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து, சிற்றுண்டி யும் கொடுக்கப்பட்டது.

இறுதியாக மும்பை திராவிடர் கழகத்தின் பொருளாளர்  அ.கண்ணன் நன்றி கூற நிகழ்ச்சி சிறப்பாக முடிவு பெற்றது .

இரண்டாம்நாள் விழா!

மும்பை திராவிடர் கழகம் மற்றும் மகிழ்ச்சி மகளிர் பேரவை இணைந்து தந்தை பெரியார் புரட்சியாளர் அம் பேத்கர் சிந்தனைக் களம் நிகழ்ச்சி 08.01.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு  தாராவி  கலைஞர் மாளிகையில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வளர்மதி கணேசன் வரவேற்புரையாற்றினார்.‌ மனோன் மணி கலைவாணன் தொடக்க உரை யாற்றினார். சுமதி மதியழகன் தலைமை தாங்கினார்.

வனிதா இளங்கோவன், வெண்ணிலா சுரேஷ் குமார், ஈஸ்வரி தங்க பாண்டியன், எழுத்தாளர் ஆனந்தி, வழக்குரைஞர் மஞ்சுளா கதிர்வேல் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் அரசி, தோழர் பாக்கியலட்சுமி, தோழர் பேரின்பவள்ளி, தோழர் பத்ம சிறி, தோழர் சரஸ்வதி கலந்து கொண் டார்கள்.

இறுதியாக சிறப்புரையாக மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ. மதிவதனி அவர்கள் பெண்கள் குறித்து தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மற்றும் தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் சவால்களையும் விளக்கமாக எடுத்து கூறினார். 

இந்தநிகழ்வில் பெண்கள் அதிகமாக பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது .

இந்த நிகழ்ச்சியில் முன்னிலை, வாழ்த்துரை, சிறப்புரை மற்றும் நன்றியுரை அனைவரும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மகிழ்ச்சி மகளிர் பேரவையின் முத்துலட்சுமி நன்றி கூற நிகழ்ச்சி சிறப்பாக முடிவுபெற்றது.

No comments:

Post a Comment