புரசைவாக்கத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட முடிவு
சென்னை, ஜன.14- 7.1.2023 அன்று மாலை 7 மணிக்கு, புரசைவாக்கம், பிரசன்ன விநாயகர் கோவில் தெரு வில் உள்ள இல்லத்தில் வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் முன்னிலை வகித்தார். கோ.அன்புமணி கடவுள் மறுப்பு கூறினார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன் பக்கனி, மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் ஆகியோர் உரையாற்றி னர்.
13.2.2023 அன்று புரசைவாக்கம் தானா தெருவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொள்ளும் பரப்பு ரைப் பயண பொதுக் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது குறித் தும், தற்போது நிலவுகின்ற சமூக - அரசியல் நிலைமைகளை குறிப் பிட்டும், கழகத் தோழர்கள் ஆற் றிட வேண்டிய பணிகளின் அவசி யம் குறித்தும் விரிவாகப் பேசினர்.
சென்னை மண்டல கழக செய லாளர் தே.செ.கோபால், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலா ளர் சு.மும்மூர்த்தி, அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வன், த.பரிதின், மங்களபுரம் அமைப்பாளர் மா.டில்லிபாபு, கண்ணதாசன் நகர் அமைப்பாளர் க.துரை, முத்தமிழ் நகர் அமைப்பாளர் வி.இரவிகுமார், சி.ஜெய காமராஜ், எம்.கோபி, கோ.ராகவி, கோ.ஜெஸ்வந்த் ஆகியோர் பொதுக் கூட்டம் சிறப்பாக நடை பெறுவதற்கு உரிய ஆலோசனை களை, கருத்துகளைக் கூறினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானம் 1 : சமூகநீதி பாதுகாப்பு - ‘திராவிட மாடல்’ விளக்க தொடர் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு - 13.2.2023 அன்று புரசைவாக்கம் தானா தெரு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2 : பரப்புரை பயண பொதுக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்வதோடு - அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களையும் அழைப்பதென முடிவு செய்யப்படு கிறது.
தீர்மானம் 3 : பொதுக்கூட்டத்தை விளக்கி - சுற்று வட்டாரங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத் துவதென முடிவு செய்யப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்
புரசை பகுதி கழக மகளிரணி அமைப்பாளர் பொறுப்பிற்கு கோ.அன்புமணியை கழகப் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அறிவித்தார்.
நிறைவாக கோ.ராகவி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment