திருச்சி, ஜன. 2- பெரியார் பெருந்தொண்டர் காட்டூர் சங்கிலிமுத்து-ஜோதி இணையரின் மகள் வினோதினி நவம்பர் மாதம் 17 ஆம் தேதி மறை வுற்றார். அவரது படத் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி டிச.17 ஆம் தேதி காலை 10 மணியளவில் காட்டூர் குருவி திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் தலைமை வகித்தார். வி சிட்டி இந்தியா பிராப் பர்ட்டி நிறுவனர் வி.எஸ்.ராகவன் மறைந்த வினோ தினி படத்தினை திறந்து வைத்தார். கழக பேச்சா ளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் கனகராஜ், மண்டல மகளிரணி செயலாளர் சோ.கிரேசி, லயன் மோகனசுந்தரம் ஆகியோர் உரையாற்றி னர். இதில் வினோதினி யின் கணவர் க.ராஜரத் தினம், மகன் நிலவெழி லன், மகள் காவியா, பெற்றோர் சங்கிலிமுத்து, ஜோதி, சகோதரர் விஜய் யோகானந்த், கவுரி மற் றும் கழகத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். நிறைவாக ரூபியா (மகளிரணி) நன்றி கூறினார்.
No comments:
Post a Comment