'மணி'யான மலர்!
2022, டிசம்பர் 2-ஆம் தேதி தனது 90-ஆவது அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இயக்கத்துக்குத் தலைவர், 'விடுதலை'க்கு ஆசிரியர், சிறந்த எழுத்தாளர், சீர்மிகு பேச்சாளர் என இவருக்குப் பன்முகங்கள் உண்டு. என் றாலும், எப்போதும் அவர் விரும்பும் அடையாளம், 'பெரியாரின் சீடன்' என் பதே!
அவருடைய 90-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, காலப் பெட்டகமாகவும், கருத்துப் பேழையாகவும், பாதுகாக்கப்பட. வேண்டிய ஆவணமாகவும் பூத்திருக்கிறது இந்த மலர். ஆசிரியரைப் பற்றி பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்கள் கண்டதை, கேட்டதை, படித்ததை. உணர்ந்ததை இதில் பகிர்ந்திருக்கிறார்கள்.
பெரியார் கொடுத்த சம்பளத்தை வாங்காதது, 'திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்' என்று அண்ணா புகழ்ந்தது, இவரது உரைவீச்சுப் பாணியைப் பற்றி கலைஞர் வரைந்த சொற்சித்திரம் எனப் பக்கத்துக்குப் பக்கம் சுவையான சம்பவங்கள் ஈர்க்கின்றன.
தன் வாழ்வில் 56 முறை சிறை சென்றவர், எதற்காகச் சிறை சென்றார், ஒவ்வொரு போராட்டத்திலும் அவருக்கு என்ன மாதிரியான வெற்றிகள் கிடைத்தன என்று பட்டியலிடப்பட்டிருப்பது சிறப்பு. பத்திரிகை ஆசிரியராகக் கடந்த 60 ஆண்டுகள் அவர் 'விடுதலை'யின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதைச் சொல்லும் புகைப்படக் கட்டுரை, இந்த மலர் மகுடத்தில் ஒரு வைரம்!
விவிலியத்தின் 10 கட்டளைகள், எழுத்தாளர் சுஜாதாவின்
10 கட்டளைகள் போல, ஆசிரியர் இளைஞர்களுக்குக் கூறும்
10 கட்டளைகள் இளையோர் மட்டுமல்லாது மக்கள் அனைவரும் கடைப்பிடித்துப் பின்பற்ற வேண்டிய பகுத்தறிவுப் பண்பாடு!
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நன்கொடை ரூ.200.
நன்றி: 'முரசொலி' 25.1.2023
Magazine releases issue on Veeramani's life
THE HINDU BUREAU
Chennai
The special issue of Modern Rationalist released recently to mark the 90 th birthday of Dravidar Kazhagam president
K. Veeramani has captured his political life and spirit through essays from many eminent persons. The issue starts with a detailed letter from Chief Minister M.K. Stalin recollecting the important moments from Mr. Veeramani’s political journey. In his essay, Mr. Veeramani writes how slowing down in his political work was not an option despite health issues since he saw his mentor ‘Periyar’ E.V. Ramsamy work and travel tirelessly till he was 95.
ஆசிரியர் கி.வீரமணி வாழ்க்கை வரலாறு குறித்து
வெளியிடப்பட்ட ஆண்டு மலர்!
அண்மையில் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ மாத இதழ், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 90ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் வீரமணியின் அரசியல் வாழ்வு மற்றும் அவருடைய செயலூக்கம், கொள்கைத் தெளிவு குறித்து முன்னணி ஆளுமைகள் பலர் எழுதிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதழின் முதல் கட்டுரையாக, ஆசிரியர் வீரமணியின் அரசியல் பயணத்தின் முக்கிய கட்டங்களை நினைவுகூரும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் விளக்கமான கடிதம் இடம் பெற்றுள்ளது. ஆசிரியர் வீரமணி தன்னுடைய கட்டுரையில், ”எனது ஆசான் தந்தை பெரியார் தனது 95ஆம் வயதிலும் ஓய்வெடுக்காமல் பணிகளையும் பயணங்களையும் தொடர்ந்ததைப் பார்த்த நான், உடல்நிலை பிரச்சினைகளைக் காரணமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள எண்ணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
(25.01.2023 நாளிட்ட ’தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி.)
No comments:
Post a Comment