லக்னோ,ஜன.23- உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தெரிவித்தார். நாடு முழு வதற்குமான பொதுத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் உபி.யில் நடந்தது. இந்நி லையில், செய்தியாளர் களை சந்தித்த சமாஜ் வாடி தலைவர் அகிலேஷ், ``அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய போவதாக கூறி வரும் கட்சி, முடிவுக்கான நாட் களை எண்ணிக் கொண் டுள்ளது.
அக்கட்சியின் தேசியத் தலைவர் மாநி லத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் சென்று பார்க்க வேண்டும்.
அப்போது தான் எத்தனை தொகுதிகளில் வெல்ல முடியும் என்பது அவருக்கு தெரி யும். பாஜ தற்போது உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும்,’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment